OUR CLIENTS
மேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி!
மேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி! Posted on 02-Oct-2018 மேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலத்த போட்டி!

சென்னை, அக். 2-

தமிழக போலீசில் மேற்கு மண்டல ஐ.ஜி., பதவியை பெற ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பலத்த போட்டி நிலவி வருகிறது.
 
முதல்வர் பழனிசாமியின் ஆதரவு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த பாரி கடந்த 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
தற்போது கோவை  போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப் பட்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் பலம் மிக்க இந்த பதவியை பிடிக்க ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்தியில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

இதில் சேலம் மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் முதல்வரின் ஆதரவாளர்கள் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இதே போல் சென்னை மாநகர இணை கமிஷனராக உள்ள ஜெயராமன் முதல்வருக்கு நெருக்கமாக உள்ள உளவுப்பிரிவு ஐ.ஜி., சத்தியமூர்த்தி மூலம் பதவியை பெற தீவிர முயற்சியில் உள்ளார். இவர்களை தவிர சேலம் மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் சுமித்சரண், ஸ்ரீதர் உட்பட ஆறு பேர் போலீஸ் உயரதிகாரிகள் மூலம் மேற்கு மண்டல ஐ.ஜி., பதவியைகைப்பற்ற தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
இதில் முதல்வரின் பார்வை யார் மீது படுகிறதோ அவர்களுக்கே மேற்கு மண்டல ஐ.ஜி., பதவி கிடைக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இவர்களில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பெரியய்யாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் மேற்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கபட்டால் கோவை போலீஸ் கமிஷனராக சஞ்சய்குமார் நியமிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் மத்தியில் கூறப்படுகிறது.

Label