OUR CLIENTS
கரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்!
கரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்! Posted on 02-Oct-2018 கரும்பு பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வறட்சி நிவாரணம், காப்பீடு வழங்க வலியுறுத்தல்!

விழுப்புரம், அக். 2-

கள்ளக்குறிச்சி பகுதியில் நிலவி வரும் கடும் வறட்சியால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாமல் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக கோமுகி, மணிமுக்தா அணைகள் விளங்கி வருகிறது. கோமுகி அணையை நம்பி 30 கிராமங்களைச் சேர்ந்த 10,860 ஏக்கர் விவசாய நிலங்கள், மணிமுக்தா அணையை நம்பி 9 கிராமங்களைச் சேர்ந்த 5,000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதிகள் பெறுகிறது.வடக்கிழக்கு பருவ மழையின் போது அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு பாசன கால்வாய்கள் மூலம் விவசாய பாசனத்திற்கு அக்., மற்றும் நவ., மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைகள், ஏரிகள், கிணற்று நீரினை பயன்படுத்தி நெல், மக்காசோளம், மரவள்ளி உட்பட பல்வேறு வகையான பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை உள்ளதால் கரும்பு சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர்.கள்ளக்குறிச்சி, சடையம்பட்டு, வீரசோழபுரம், சிறுவங்கூர், ஆலத்தூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், தண்டலை, அகரகோட்டாலம் உட்பட பல்வேறு பகுதிகளில் 5,000 எக்டர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கோடை காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு சொட்டு நீர் பாசன முறையிலும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது நிலவி வரும் கடும் வறட்சியால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நீர் பிடிப்புகளும் முற்றிலும் வறண்டு கிடப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து போனதால் கரும்பு பயிர்களுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்காமல் பல இடங்களில் கரும்புகள் காய்ந்து வருகிறது.மேலும், கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் வறட்சி பகுதியாக அறிவித்து நிவாரண உதவி மற்றும் கரும்பு பயிர்களுக்கான காப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்த வண்ணம் உள்ளனர்.துவக்கத்தில் கரும்பு பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையினால் பயிர்கள் காய்ந்து வருவதை கண்டு விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

Label