OUR CLIENTS
தி.மு.க.வில் 2 பதவி வைத்திருப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்
தி.மு.க.வில் 2 பதவி வைத்திருப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல் Posted on 03-Oct-2018 தி.மு.க.வில் 2 பதவி வைத்திருப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

சென்னை
கட்சியில் 2 பதவிகள் வைத்திருப்பவர்கள் ஒரு பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் புதியவர்களுக்கு பதவி கிடைக்க வழி ஏற்படும் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தி.மு.க. முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.க. விதியின்படி ஒருவர் இரண்டு நிர்வாகப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்க பட்டிருந்தாலோ அல்லது நியமிக்கப் பட்டிருந்தாலோ ஏதேனும் ஒரு பொறுப்பில் நீடிக்க விருப்பம் தெரிவித்து தலைமைக்குக் கடிதம் கொடுத்தாலன்றி, கீழமைப்பிலிருந்து தாமாகவே விலகிவிட்டதாகக் கருதப்படும். இந்த விதி நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஏற்கனவே கள ஆய்வின் போது இரண்டு பொறுப்புகளில் செயல்பட்டு வந்த நிர்வாகிகளுக்கு பதில் புதியவர்களை (ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களின் உறவினர்கள் தவிர்க்கப்பட வேண்டும்) குறிப்பாக நடந்து முடிந்த கழகத் தேர்தலில் பல்வேறு பொறுப்புகளில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அக்டோபர் 15-ந் தேதிக்குள் நியமிக்கப்பட வேண்டும்.
பூத் கமிட்டி நியமித்தல் (ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி) மற்றும் சரிபார்த்தல் பணிகளை அக்டோபர் 15-ம் தேதிக்குள் முழுமையாக நிறைவு செய்து தலைமைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்ட அளவில் சிலர் 2 கட்சிப் பதவிகளை வைத்துள்ளதால் அதில் ஒரு பதவியை ராஜினாமா செய்வதன் மூலம் புதியவர்களுக்கு பதவி கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. எனவே டி.ஆர்.பாலுவின் இந்த நடவடிக்கையை கட்சிக்காரர்கள் வரவேற்றுள்ளனர்.

Label