OUR CLIENTS
நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி Posted on 03-Oct-2018 நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மதுரை
கூவத்தூரில் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த ரகசியமும் நடைபெறவில்லை என வருவாய்துறை  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு. அத்தகைய கனவில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டதே தமிழக அரசுக்கு முதல் கட்ட வெற்றி. தமிழகத்தில் வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்படும் இடங்களாக 4,399 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 4,399 இடங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

2011, 2016 சட்டப்பேரவை தேர்தலில் ஜெயலலிதாவுக்காக தமிழகத்தில் எங்கும் தினகரன் வாக்கு சேகரிக்கவில்லை. ஜெயலலிதாவுக்காக வாக்கு சேகரித்த ஆதாரத்தை தினகரன் வெளியிட்டால் அரசியலை விட்டே செல்கிறேன். திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெறலாம் என தினகரன் கனவு கண்டால், அது பகல் கனவாக போய்விடும். கடந்த 10 ஆண்டுகளில் அதிமுகவுக்காக தினகரன் ஏதும் செய்யவிலை.

அதிமுகவால் வெற்றி பெற்ற கருணாஸ் தற்போது ஒரு இனத்தின் தலைவராக அடையாளம் காட்டி கொள்கிறார்.  கூவத்தூரில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த ரகசியமும் நடைபெறவில்லை. நடிகர் விஜயை அரசியலுக்கு மக்கள் அழைத்தார்களா?

அரசியலில் எப்போது குதிக்கலாம் என்று விஜய் காத்துக்கொண்டிருக்கிறார். நடிக்கிற வேலையை மட்டும் அவர் பார்க்கட்டும். விஜய்யால் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாது . சினிமா நடிகர்களுக்கு அரசியலில் ஈடுபடும் அளவுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை கிடையாது. நாங்கள் நாட்டை பார்த்துகொள்ளும்போது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்புகிறீர்கள்? இவ்வாறு, அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Label