OUR CLIENTS
வீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு!
வீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு! Posted on 04-Oct-2018 வீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சம் காசோலை பறிப்பு - காவல் ஆய்வாளர், விசிக பிரமுகர் மீது வழக்குப் பதிவு!

சென்னை, அக். 4-

தாம்பரம் இரும்புலியூரில் விசிக பிரமுகர், சினிமா துணை நடிகைக்கு ஆதரவாக வீடு புகுந்து முதியவரை மிரட்டி ரூ.10 லட்சத்துக்கான காசோலையை எழுதி வாங்கிச் சென்ற காவல் ஆய்வாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர், திலகவதி நகரைச் சேர்ந்தவர் முத்தையா (72). கட்டுமானத் தொழில் செய்துவந்த முத்தையா தற்போது மகன் கிறிஸ்டோபர் வீட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இவருடைய வீட்டுக்குள் ஆய்வாளர் தாம்சன், காஞ்சிபுரம் மாவட்ட விசிக செய்தித் தொடர்பாளர் பாண்டியன் அவரது மனைவி டிவி நடிகை சாஜினி மற்றும் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

உங்கள் மகன் எங்கே என்று முத்தையாவைக் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். முத்தையாவின் மகன் வீட்டில் இல்லை என்றவுடன் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடுவதாகக் கூறியுள்ளனர். ஒரு ஆய்வாளரே இரவில் அத்துமீறி நுழைந்து ரவுடிகளை வைத்து மிரட்டலாமா? என முத்தையா கேட்க, நான் போலீஸில் ரவுடி ஆய்வாளர் என்று பெயர் வாங்கியவன். இங்குள்ள ஏசி, இன்ஸ்பெக்டர் யாரும் ஒன்றும் செய்ய முடியாது என தாம்சன் மிரட்டியுள்ளார். பின்னர் வலுக்கட்டாயமாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை எழுதி வாங்கிச் சென்றுள்ளனர். இதுபற்றி மறுநாள் முத்தையா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாராக அளித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். விசாரணையில் தாம்சன், பாண்டியன் அவரது மனைவி சாஜினி ஆகியோர் ரவுடிகளுடன் வந்து காசோலையை மிரட்டி எழுதி வாங்கியது உறுதியானது. ஆய்வாளர் தாம்சன் ஏற்கெனவே பணியிலிருந்தபோது லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் பிடிபட்டு தற்போது பணியிடை நீக்கத்தில் உள்ளார். 

தற்போது மிரட்டல் வழக்கில் சிக்கியதால் அவர் மீதும், விசிக பிரமுகர் பாண்டியன், அவரது மனைவி உள்ளிட்டோர் மீது ஆபாசமாகப் பேசுதல் , கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட
5 பிரிவுகளில் பீர்க்கங்கரனை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Label