OUR CLIENTS
பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் Posted on 04-Oct-2018 பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணி புரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து செயலாளர் டேவிதார் தலைமையில் தொழிற்சங்கங்களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இன்று கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக தொழிற் சங்கங்கள் அறிவித்தனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யூ.,, ஏ.ஐ.டி. யு.சி., பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. விடுதலை சிறுத்தை, எச்.எம்.எஸ். உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

பஸ் தொழிலாளர்கள் பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்டு கோட்டையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திட்டமிட்டு அங்கு திரண்டனர்.தொழிற்சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் சங்க கொடிகளை பிடித்தவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை முழக்க மிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கோட்டைக்கு செல்ல முயன்ற போது அவர்களை போகவிடாமல் போலீசார் தடுத்து மறித்தனர். பல்லவன் இல்ல சாலையில் அமர்ந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை அங்கிருந்து வெளியே விடாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Label