OUR CLIENTS
அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகொள்
அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகொள் Posted on 04-Oct-2018 அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வுகாண வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகொள்

சென்னை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை நிலுவையில் வைக்காமல் உடனே தீர்வுகாண வேண்டும் என ஜிகே வாசன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தமிழக அரசு முறையான பேச்சுவார்த்தை நடத்தாததும், பேச்சுவார்த்தை நடைபெற்ற போது கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறியதும், பின்பு நிறைவேற்றாமல் இருப்பதும், தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதும் இன்னும் நீடித்துக்கொண்டே போகிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழக அரசு தான்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது கோரிக்கைகளை இனியும் நிலுவையில் வைக்காமல் உடனடி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Label