OUR CLIENTS
மந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு!
மந்தைவெளியின் ஏழை நாயகன் 20 ரூபாய் மருத்துவர் மறைவு! Posted on 05-Oct-2018 மந்தைவெளியின் ஏழை நாயகன்  20 ரூபாய் மருத்துவர் மறைவு!

சென்னை, அக். 5-

20 ரூபாய் டாக்டர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட மந்தைவெளி மருத்துவர் ஜெகன் மோகன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

வாழ்நாளில் மக்கள் சேமிப்பின் பெரும்பகுதி மருத்துவத்துக்கே செல்லும் நிலையில் சாதாரண மக்கள் பெரிய அளவிலான மருத்துவர்கள், தனியார் மருத்துவர்கள் பக்கம் செல்லவே அஞ்சுவர். சாதாரண காய்ய்ச்சல் என்று சென்றாலே பல டெஸ்ட்டுகள் எடுத்து மருத்துவக்கட்டணம் மட்டுமே குறைந்தது 500 ரூபாயைத்தாண்டும். பின்னர் மாத்திரை மருந்து என பணம் கரையும். சாதாரண ஏழை மக்கள் வருமானம் இன்றி வாடுவோர் சிகிச்சைக்கைக்காக அரசு மருத்துவமனையை நாடும்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களின் பிணி தீர்க்க சென்னை மந்தைவெளியில் மருத்துவர் ஒருவர் கடந்த 43 ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர் டாக்டர் ஜெகன்மோகன் (76).

மந்தைவெளி, மயிலாப்பூர் மற்றும் சுற்றுவட்டார மக்களால் 20 ரூபாய் டாக்டர் என அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் ஜெகன் மோகன் நேற்று முன்தினம் காலமானார். அவரது இழப்பால் வாடும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

மந்தைவெளி, மயிலாப்பூர் மக்கள் சாதாரண ஏழைமக்கள், நடுத்தர வர்க்கத்தினரின் பிணி தீர்க்கும் மருத்துவராய் வாழ்ந்தவர் டாக்டர் ஜெகன்மோகன். சாதாரணமாக மருத்துவர்கள் குறைந்தப்பட்ச கட்டணமாக 100 முதல் 250 ரூபாய் வரை வசூலிப்பர். மருந்து மாத்திரை என 300 ரூபாய்க்கு மேல் எழுதித்தருவர். ஆனால் டாக்டர் ஜெகன்மோகன் தனது மருத்துவத்திற்காக பெற்றது 20 ரூபாய் மட்டுமே. அதுவும் இல்லாதவர்களுக்கு ஒன்றும் வேண்டாம் பரவாயில்லை என கூறி அனுப்பி வைப்பாராம். சிலருக்கு தனக்கு வரும் சாம்பிள் மருந்துகளை இலவசமாக கொடுப்பாராம்.

இன்னும் சிலர் வேறு மருத்துவர் வருமானத்திற்காக எழுதித்தரும் மருந்துகளை விலை அதிகம் என வாங்கவேண்டாம் என்று கூறி குறைந்த விலையிலான மருந்துகளை எழுதித்தருவாராம். 1942&ல் நெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் 1942&ம் ஆண்டு பிறந்த டாக்டர் ஜெகன்மோகன் சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1972&ம் ஆண்டு மருத்துவப்படிப்பை முடித்தார். 1975&ம் ஆண்டு மந்தைவெளியில் சிறிய அளவில் ஏழை மக்களுக்காக கிளினிக் தொடங்கிய டாக்டர் ஜெகன்மோகன் முதலில் வாங்கிய பீஸ் ரூ.1 மட்டுமே.

கடந்த ஆண்டுவரை ரூ.5 மட்டுமே மருத்துவ சிகிச்சைக்காக பெற்று வந்தார். அவர் வாங்கும் அந்த தொகைக்கூட செவிலியருக்கு சம்பளம் மற்றும் பிற தேவைக்களுக்காக மட்டுமே வாங்குவார். பலருக்கு அவரது நிலையை கருத்தில் கொண்டு பீஸ் வாங்காமலும், சிகிச்சைக்காக தனது கையிலிருந்து செலவுக்கும் பணமும் கொடுப்பார். அவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகளும் ரூ.30 ரூபாய்க்குள் இருக்கும். கைராசி மருத்துவர் என பெயரெடுத்த டாக்டர் ஜெகன்மோகன் தினமும் காலை மாலை என 300&க்கும் மேற்பட்ட நோயாளிகளை பார்த்து வந்துள்ளார். 1975 முதல் 43 ஆண்டுகளாக 3 தலைமுறை மக்களுக்கு சிகிச்சை அளித்துவந்த டாக்டர் ஜெகன்மோகன் தனது உடல் நலம் பாதிக்கப்படும் சில நாட்கள் வரை மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அவரது மறைவை தாங்கிக்கொள்ள முடியாத அப்பகுதி மக்கள் கண்ணீருடன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Label