OUR CLIENTS
தி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்!
தி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்! Posted on 05-Oct-2018 தி.மலை வேளாண் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து நீக்கம்!

திருவண்ணாமலை, அக். 5-

திருவண்ணாமலை பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவியை, வேளாண் கல்லூரி யில் இருந்து நீக்கி வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சுதாகர் உத்தரவிட்டுள் ளார். இதனை எதிர்த்து நீதி மன்றம் செல்லப்போவதாக மாணவி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு, அங்கு பணியாற்றும் பேராசிரியர் தங்கபாண்டியன் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. அவருக்கு பெண் உதவி பேராசிரியைகள் மைதிலி மற்றும் புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாக புகார் கூறப்பட்டது.

இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின்பேரில் பேராசிரி யர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த பெண் உதவி பேராசிரியைகள் இருவரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப் பட்டனர். மாணவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. அதேநேரம், மாணவி திருச்சியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து வேளாண் பல்கலைக் கழக பதிவாளர் (பொறுப்பு) சுதாகர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் கல்லூரியில் அக்.1-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றவில்லை என்ற காரணத் தால் ஒழுங்கு நடவடிக்கையாக வாழவச்சனூரில் உள்ள கல்லூரி யில் இருந்து நீக்கம் செய்யப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாணவியிடம் கேட்டபோது, நான் அளித்த புகாரின்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கண் துடைப்புக்காக தங்க பாண்டியனை சஸ்பெண்ட் செய்துள்ளனர். உதவி பேராசிரியைகள் இருவரையும் அவர்களது சொந்த ஊருக்கு மாற் றம் செய்துள்ளனர். என்னை ராகிங் செய்த மாணவிகள் 2 பேர் மீது உரிய ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கல்லூரி முதல்வர் மீதான புகாரை யும் விசாரிக்கவில்லை. என்னை மிரட்டி பிரச்சனையை மூடி மறைக்கும் வகையிலேயே பல்கலைக்கழக நிர்வாகம் செயல்படுகிறது. கல்லூரியில் இருந்து நீக்கிய உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளேன் என்றார்.

Label