OUR CLIENTS
ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் அல்லது பொருளாதார தடையை எதிர்கொள்ளுங்கள்!- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் அல்லது பொருளாதார தடையை எதிர்கொள்ளுங்கள்!- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை Posted on 05-Oct-2018 ரஷ்யாவுடன் பரிவர்த்தனைகளை நிறுத்துங்கள் அல்லது பொருளாதார தடையை எதிர்கொள்ளுங்கள்!- இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன், அக். 5-

ரஷ்யாவுடன் பரிவர்த் தனைகளை நிறுத்துங்கள் அல்லது தடையை எதிர்கொள்ளுங்கள் என்று நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் பரிவர்த் தனைகளை மேற்கொள்ள கூடாது என தங்கள்  நட்பு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா, மீறி ரஷ்யாவுடன் வர்த்தக உறவுகளை வைத்துக்கொண்டால், பொருளாதார தடை விதிக்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

உக்ரைனில் தலையிட்டது, அமெரிக்க அரசியலில் தலையிட்டது உட்பட பல பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி ரஷ்யா மீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளாதார தடை விதித்துள்ளது. அதன் பின், ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நாடுகள், தனி நிறுவனங்கள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், இந்தியா - ரஷ்யா இடையே நட்புறவு நிலவுவதால், எஸ்&400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியது. அதனால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது. 

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:& “  எங்களின் நட்பு நாடுகள் அனைத்தும், ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளை கைவிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு கைவிடாவிட்டால், நட்பு நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும்” என்று தெரிவித்தார். 
ரஷ்ய அதிபர் புதின் நேற்று இந்தியா வருகை தந்தார். புதினின் இந்த பயணத்தின் போது, ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை அமைப்பை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.

Label