OUR CLIENTS
அமெரிக்காவால் ஈரான் அச்சுறுத்தலை சந்திக்கிறது - அயத்துல்லா அலி காமெனி
அமெரிக்காவால் ஈரான் அச்சுறுத்தலை சந்திக்கிறது - அயத்துல்லா அலி காமெனி Posted on 05-Oct-2018 அமெரிக்காவால் ஈரான் அச்சுறுத்தலை சந்திக்கிறது - அயத்துல்லா அலி காமெனி

ஈரான், அக். 5-

அமெரிக்காவால் ஈரான் தொடர்ந்து பொருளாதார அச்சுறுத்தலை எதிர்க் கொண்டு வருகிறது என்று அந்நாட்டின் தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அயத்துல்லா அலி காமெனி அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் பேசும்போது, \"ஈரான் மக்கள் மிகவும் உணர்வுப்பூர்வமான காலத்தை கடந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா பொருளாதார அச்சுறுத்தலால் ஈரான் தொடர்ந்து எதிர்க் கொண்டு வருகிறது\" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

ட்ரம்ப் அதிபரான பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது இதனைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் ஈரான்  மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அமெரிக்காவுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label