OUR CLIENTS
இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் ஒப்படைப்பு
இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் ஒப்படைப்பு Posted on 05-Oct-2018 இலங்கையில் தமிழர்களுக்கு சொந்தமான நிலம் ஒப்படைப்பு

கொலும்பு, அக். 5-

இலங்கை போரின்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் ஒப்படைக்க இலங்கை ராணுவத்துக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். 

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. விடுதலை புலிகள் இயக்கத்துக்கும், இலங்கை ராணுவத்துக்குமான இந்த போர் கடந்த 2009&ம் ஆண்டு முடிவடைந்தது.

இதையடுத்து, இந்த போரின் போது, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்த தமிழகளின் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், தமிழர்களிடம் இருந்து ராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலங்களை மீண்டும் தமிழகளிடம் ஒப்படைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அக்டோபர் 31&ம் தேதிக்குள் அனைத்து நிலங்களையும் ஒப்படைக்க வேண்டும் என இலங்கை அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Label