OUR CLIENTS
வறண்ட சருமமா? கவலை வேண்டாம்!
வறண்ட சருமமா? கவலை வேண்டாம்! Posted on 05-Oct-2018 வறண்ட சருமமா? கவலை வேண்டாம்!

ஒவ்வொரு நாளும் சருமத்தின் மீது அக்கறை காட்டினால் மட்டுமே அது பொலிவாக காட்சியளிக்கும்
சருமத்தைப் பற்றிய கவலை மட்டும் நம்மிடம் இருந்து விலகாத ஒன்று.

ஒவ்வொரு நாளும் சருமத்தின் மீது அக்கறை காட்டினால் மட்டுமே அது பொலிவாக காட்சியளிக்கும். முகத்தில் சுருக்கம், மரு, பிம்பிள், வெயிலினால் முகத்தில் ஏற்படும் கறுமை, சுற்றுச்சூழல் மாசுபாடால் ஏற்படும் அலர்ஜி போன்றவை சருமத்தின் முக்கியப் பிரச்னைகள்.

இவற்றையெல்லாம் ஒருவழியாக சரி செய்து கடந்து வந்தால், அடுத்ததாக பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சரும் பிரச்சனைகள் வந்துவிடும். வெயில் மற்றும் மழைக் காலங்களில் சரும பாதிப்புகள் அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் உடல், முகம் மற்றும் தலைப் பகுதிகளில் எண்ணெய் பிசுக்கு அதிகமாக இருக்கும். அதேபோல் பனிக்காலத்தில் சருமம் வறண்டு, செதில் செதிலாக உதிரக்கூடும். தற்போது மழைக்காலமும் பனிக்காலமும் நம்மை நெருங்கிக் கொண்டிருப்பதால் சருமத்தின் மீது கவனம் செலுத்துவது அவசியம்.

காரணங்களை அறிந்துக் கொள்வோம்

பருவநிலை மாற்றத்தின் போது சருமம் வறண்டு போவதற்கு பல காரணங்கள் உண்டு. சாலிசிலிக் இருக்கக் கூடிய பேஸ் வாஷ், டோனர், ஸ்க்ரப் போன்றவை பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு குறையும். தற்காலிகமாக இது எண்ணெய் பிசுக்கை நீக்குவதால் எண்ணெய் சுரப்பி தூண்டப்பட்டு அதிகபடியான எண்ணெய் சுரக்க ஆரம்பிக்கும். விளைவாக சருமத்தின் றிபி அளவில் மாற்றம் ஏற்படும்.

அடிக்கடி முகம் கழுவுவதும் தவறான ஒன்றுதான். முதலில் ஒருவரது சருமம் எப்படிப்பட்டது என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடந்து அவரது சருமத்திற்கு உகந்ததை பயன்படுத்த வேண்டும். அப்படியில்லாமல் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் கண்ட கண்ட க்ரீம்களையும் வாங்கி பயன்படுத்தி வந்தால் சருமம் வறண்டு பொலிவிழந்து போகும். தவிர, நமது தினசரி சரும பராமரிப்பு என்பது எல்லா காலங்களிலும் உகந்ததாய் இருக்காது. பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப நம் சரும பராமரிப்பை மாற்றிக் கொள்ளவது அவசியம்.

வறட்சியை போக்க

உங்கள் சருமத்தை ஒரு பரிசோதனை பொருளாக மாற்றி கொள்ளாமல், தோல் நோய் நிபுணரை அணுகி உங்கள் சருமத்தை பற்றியும், சரும பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். எல்லா சருமத்திற்கும் உகந்த மற்றும் கடுமையான இரசாயனங்கள் சேர்க்கப்படாத ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம். மேக் அப் ரிமூவராக மிஸ்ஸெல்லார் வாட்டரை பயன்படுத்தலாம். குளியலுக்குப் பின் மாய்ஸ்சுரைசரை உபயோகித்து வந்தால் சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் அதிகபடியாக குளிர்ந்த அல்லது சூடான நீரில் குளிப்பதை தவிர்த்து, வழவழப்பான சருமத்தைப் பெற்றிடுங்கள்.

Label