OUR CLIENTS
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி- அமைச்சர் செல்லூர் ராஜூ
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி- அமைச்சர் செல்லூர் ராஜூ Posted on 05-Oct-2018 அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயற்சி- அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயன்று வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் இன்று கூட்டுறவுத்துறை சார்பில் சிறு வணிகக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் அனீஷ்சேகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 152 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 57 லட்சத்து 60 ஆயிரம் சிறு வணிக கடன் உதவி வழங்கினார்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவுத்துறை மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்தது. ஜெயலலிதா பொறுப்புக்கு வந்த பிறகு அந்த துறையை லாபகரமாக மாற்றினார். தமிழக கூட்டுறவுத்துறை சிறப்பான நிர்வாக செயல்பாட்டுக்காக 24 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கடனுதவி திருப்பரங்குன்றம் தேர்தலையொட்டி வழங்கப்படவில்லை. தமிழகமெங்கும் இந்த திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இன்னும் 25 ஆயிரம் பேருக்கு கடனுதவி வழங்க உள்ளோம். இந்த ஆட்சி 3 மாதத்தில், 6 மாதத்தில் போய்விடும் என்று தி.மு.க.வினர் பிரசாரம் செய்தனர். ஆனால் தற்போது 18 மாதங்களை கடந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சியை தந்து வருகிறோம். இந்த அரசுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறுகையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக தினகரன் கூறுவது பிரித்தாளும் சூழ்ச்சி ஆகும். அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த தினகரன் முயன்று வருகிறார். இந்த பிரச்சனைக்கு ஓ.பன்னீர் செல்வம் விரிவாக விளக்கம் அளிப்பார் என்றார். விழாவில் நிர்வாகிகள் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், பாரி, ஓம்.கே.சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Label