OUR CLIENTS
நுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்!
நுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்! Posted on 08-Oct-2018 நுகர்வோரை ஏமாற்றும் மசாலா நிறுவனங்கள்!

வேலூர், அக்.8-

நம்பி வாங்கும் நுகர்வோரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் நிலைக்கு ஆச்சி மசாலா நிறுவனம் துணிந்து இறங்கியுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் ஆச்சி, சக்தி மசாலா நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த பெயரைப் பயன்படுத்திக் கொண்டு ஆச்சி மசாலா நிறுவனம் தரமில்லாத பொருட்களை நுகர்வோர் தலையில் கட்டி வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அதாவது ஒரு பொருள் உற்பத்தி செய்து அதை பாக்கெட்டுகளில் அடைப்பதற்கு முன்பாகவே தயாரிக்கப்பட்ட தேதி காலாவதியாகும் தேதி, எடை, அதன் அதிகபட்ச சில்லரை விலை போன்றவற்றை குறிப்பிட வேண்டும். ஆனால் இப்படி காலாவதியாகும் தேதியை மட்டும் அழித்தால் அழிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆச்சி மசாலா நிறுவனமானது வேலூர் மாவட்டம், குடியாத்தம் செல்லும் வழியில் உள்ள பள்ளிகொண்டா அருகே நிலத்தின் மத்தியில் ஒரு வாடகை குடோனில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வைத்து காலாவதியான தேதியை அழித்து விட்டு புதிய தேதியை அந்த உறையின் சீது அச்சிடும் பணியை இரவு பகலாக செய்து வந்தது. இந்த செயல் நுகர்வோரை ஏமாற்றி வர்த்தகம் செய்து விடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட ஆச்சி மசாலா நிறுவனத்தின் குட்டு வெளிப்பட்டது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர் இது பழைய செய்தி.

இப்போது புதிய செய்தி பரவி வருகிறது. அதாவது விற்பனையை அதிகப்படுத்த வேண்டி கவர்ச்சிகரமான பேக்குகளில் மீண்டும் பழைய தயாரிப்புகளை சாதுர்யமாக மீண்டும் பேக் செய்து மார்க்கெட்டில் தைரியமாக மனசாட்சியே இல்லாமல் விற்பனைக்கு விட்டுள்ளது இந்த ஆச்சி மசாலா, சக்தி மசாலா நிறுவனங்கள். பள்ளிகொண்டாவில் கையும் களவுமாக சிக்கியபோது செய்வதறியாது திகைத்ததுதான் இந்த ஆச்சி மசாலா நிறுவனம். 

காலாவதியானதை தந்திரமாக ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று விளம்பரம் செய்து நுகர்வோர் தலையில் எளிதில் கட்டிவிடுகின்றது இந்த ஆச்சி மசாலா நிறுவனம் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி காலாவதியான நாட்பட்ட மசாலா அயிட்டங்களை வாங்கி உண்ணும் நுகர்வோருக்கு வயிற்று உபாதைகள் பெருமளவில் வருவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் ஏற்படும். இந்த மசாலாவை வாங்கி உட்கொள்ளும் நுகர்வோருக்கு வயிற்று கோளாறு, வயிற்று வலி வருகிறது. கெடாமல் இருக்க இதில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பிரச்னைக்கு காரணம் என்று பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. சென்னையில் இருந்து தனது தயாரிப்புகளை தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறது. தமிழகத்தில் உள்ள உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் அவரவர் எல்லைக்குள் உள்ள பகுதிகளில் ஆய்வு நடத்தினால் உண்மை நிலை தெரியும். இந்நிலையில் வீணாகி குப்பையில் கொட்டப்பட வேண்டிய மசாலா பொருட்களை தள்ளுபடி விலை மற்றும் ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்று பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து விட்டு முன்னணி மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் வைத்து அழகு படுத்தி காண்போரை கவர்ந்து இழுக்கும் நிலைக்கு கொண்டு வந்து தனது வர்த்தகத்தை குறுக்கு வழியில் பெருக்கி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஆச்சி மசாலாவை வாங்கி பயன்படுத்தும் இல்லத்தரசிகள் இனி எந்த மசாலாவையும் வாங்கவே கூடாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மசாலாவில் இருந்து பஜ்ஜி, போண்டா மாவும், இதே நிலையில்தான் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இதை நுகர்வோர் கடுமையாக எதிர்க்க தொடங்கியுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிய தயாரிப்புகள் விற்பனைக்கு கொண்டு வராமல் பழைய காலாவதியான இருப்பு வைக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து பணத்தை வாரி சுருட்டி வருகின்றது மசாலா நிறுவனங்கள். குட்காவை எப்படி பூண்டோடு ஒழித்தார்களோ அதேபோன்று மசாலா நிறுவனங்களையும் ஒழிக்க அரசு முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் நுகர்வோரும், இல்லத்தரசிகளும், சமூக நல ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கெட்டுப்போன நாட்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் ஆச்சி மசாலா, சக்தி மசாலா  நிறுவனங்கள் தனது பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். மாற்றிக் கொள்ளாவிட்டால் மாற்றிக் கொள்ள வைப்போம் என்று சமூக ஆர்வலர்கள் தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஆச்சி மசாலா நிறுவனம் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளுமா? அல்லது அப்படியே தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label