OUR CLIENTS
இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை கவுரவிக்க சிறப்பு தபால் தலை வெளியிடும் அமெரிக்கா
இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை கவுரவிக்க சிறப்பு தபால் தலை வெளியிடும் அமெரிக்கா Posted on 25-Aug-2016 இந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை கவுரவிக்க சிறப்பு தபால் தலை வெளியிடும் அமெரிக்கா

வாஷிங்டன்:
இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதுபோல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் இந்த திருநாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.


குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பெரும்பானமையாக வாழும் இந்திய வம்சாவழியினர் ஒருவார காலம் வரை ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் அந்நாட்டின் எம்.பி.க்கள், அரசு உயரதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவதும் மரபாக உள்ளது. இந்த கொண்டாட்டஙகளில் அந்நாட்டில் வாழும் இந்திய பிரமுகர்கள் பங்கேற்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்திய மக்களின் முக்கிய திருநாளான தீபாவளியை கவுரவிக்கும் அவகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிட வேண்டும் என இந்திய மக்கள் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் பலகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிட அமெரிக்க அரசின் தபால் துறை முன்வந்துள்ளது. வாணவேடிக்கை பின்னணியில் தீபம் எரிய, ‘என்றென்றும் அமெரிக்கா 2016’ என்ற வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தபால் தலை வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்பு இங்கு வாழும் சுமார் 30 லட்சம் இந்தியர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள இந்திய மக்கள் நல சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Label