OUR CLIENTS
அரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி?- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு!
அரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி?- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு! Posted on 09-Oct-2018 அரசியல் தலைவர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி?- பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ள தொகுப்பு!

சென்னை, அக்.9-

குரு பகவான் 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் அந்த ஜாதகர்களுக்கு நன்மைகளை வாரி வழங்குவார் என்பது பொதுவான விதி. கோச்சார ரீதியாக விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் நம் அரசியல் தலைவர்களுக்கு எத்தகைய பலன்களை வழங்க உள்ளார் என்பதை, பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள் குரு பெயர்ச்சி, ஜோதிடர்கள் கணிப்பு, ஸ்டாலின், பழனிசாமி,  பன்னீர்செல்வம், ராகுல், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அன்புமணி, ராமதாஸ், தினகரன், நரேந்திர மோடி, பிரதமர், முதல்வர், தி.மு.க., திமுக, மக்கள் நீதி மையம், காங்கிரஸ், பா.ஜ., பாஜ,அ.தி.மு.க., அதிமுக, தே.மு.தி.க., தேமுதிக, பா.ம.க., 

அதன் விபரம்:
ஜோதிடர் பரணிதரன், சென்னை:

முதல்வர் பழனிசாமி: இவரது ராசிக்கு, பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு வந்துள்ள குரு பகவான் பதவியில் சில சங்கடங்களை ஏற்படுத்துவார். எதிர்ப்புகள் தோன்றினாலும், அதை சமாளிக்கும் சக்தியும் உண்டாகும்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: ஒன்பதாம் இடத்திற்கு மாறிய குரு பகவான் எண்ணற்ற நன்மைகளையும், முன்னேற்றத்தையும் வழங்கிடுவார். கவுரவமான மாற்றம் ஏற்படும். அவசரப்பட்டு எந்த ஒரு பொறுப்பையும் ஏற்காமல் நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நன்மைகளை காணலாம்.
டி.டி.வி.தினகரன்: தற்போதுள்ள நிலையில் மாற்றம் உண்டாகும். எதிரிகளை அனுசரிப்பதால் ஏற்றம் காணலாம். 2019 பிப்., 10 வரை ராகு பத்தில் இருப்பதும் அதன்பின் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் கைக்கு வந்தது, வாய்க்கு வரவில்லையே என்ற, நிலையை உருவாக்கும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: இவரது ராசிக்கு நான்காம் இடத்திற்கு வந்துள்ள குருவால் அலைச்சல். ஓய்வற்ற நிலை உடல்நிலையில் சங்கடங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பிப்., 13க்கு பிறகு, எதிரிகளால் ஆதாயம் யோசித்து செய்யும் முயற்சிகளில் வெற்றி என்ற நிலை ஏற்படும்
காங்., தலைவர் ராகுல்: ஆறாம் இடத்திற்கு வந்துள்ள குருவால் தற்போதுள்ள நிலையில் பின்னடைவு உண்டாகும். ஏழில் சனி சஞ்சரிப்பதால் நட்பில் அதிருப்தி உண்டாகும். கூட்டணியில் பிளவுகளை சந்திக்கலாம்.
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: பாக்கிய ஸ்தானத்திற்கு வந்துள்ள குருவால் இடமாற்றம், அரசியலில் முன்னேற்றம் உண்டாகும் வாய்ப்புகள் உருவாகும் என்றாலும், பத்தில் லாபஸ்தானாதிபதி அமர்ந்திருப்பதாலும் பிப்., 13க்கு பிறகு கேது அங்கே சஞ்சரிக்க இருப்பதாலும் தற்போதுள்ள தொழிலில் சங்கடங்களை சந்தித்து முன்னேற வேண்டியிருக்கும்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். எனினும் பிப்., 13 வரை சங்கடங்கள் நீடிக்கும். மருத்துவமனை செல்லும் நிலை உருவாகும். அதன்பிறகு ஆரோக்கியம் சீராகும். புதிய வழியில் நடைபோட்டு வெற்றி காணும் நிலை ஏற்படும்.
பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: அரசியலில் சாதகமான நிலை உருவாகும். தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் துணிவுடன் செயல்பட்டு, இதுவரையில் காணாத வெற்றிகளை காண்பார்.

நடிகர் ரஜினிகாந்த்: நம்பிக்கையுடன் காத்திருந்தவற்றில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். அரசியலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போகலாம்.
ஜோதிடர் சிவ.குரு.ரவி

பிரதமர் நரேந்திர மோடி: ஜென்ம ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகியுள்ளதால் ராம ஜென்ம வனத்திலே என்ற நிலையில் தான் இனி அரசியல். ஒரு பக்கம் எதிர்ப்புகளை சமாளிக்கும்வலிமையை வழங்கினாலும் மறு பக்கம் நினைத்திருக்கும் வெற்றிகளை அடைய முடியாமல் போகலாம். எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்பட்டால் மட்டுமே நன்மைகளை காண முடியும். குரு பெயர்ச்சியான நேரம் சரிவர அமையாததால் தோல்விகள் தொடரலாம்.
காங்., தலைவர் ராகுல் : அதிநவீன யுக்திகளை கையாண்டு, வெற்றிகளை காண்பார். எதிரிகள் பலவீனம் அடைவர். குரு பெயர்ச்சியை விட, ஜனன கால தசா புத்திகள் உயர்வான நிலையில் உள்ளன. இனி, இவரது அரசியலில், அடைமழை ஆரம்பம்.
முதல்வர் பழனிசாமி: ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து, பல நன்மைகளை வாரி வழங்கிய குரு பகவான், பத்தாம் இடத்திற்கு பெயர்ச்சியானது, நல்லதல்ல; குழப்பங்கள் தொடரும். தெளிவான சிந்தனைகள் அமைவது கடினம். ‘மாஞ்சி மாஞ்சி மாவு இடித்தாலும், மகராசி தருவது ஒரு கொழுக்கட்டை தான்’ என்ற நிலையில், தற்போதுள்ள அரசியல் அரங்கேற உள்ளது; எச்சரிக்கை தேவை.
துணை முதல்வர் பன்னீர் செல்வம்: ஓடிப்போனவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்ற அமைப்பில், ராஜ கிரகம் என, வர்ணிக்கப்படும், குரு பகவான், இனி, துணிச்சலான செயல்கள், துரிதமான நிலையில் அரங்கேற செம்மைப்படுத்துவார். ‘வல்லவன் வெட்டிய வாய்க்கால், மேற்கிலும் பாயும், வடக்கிலும் பாயும்‘ என்ற நிலையில், குரு பெயர்ச்சி, அரசியலில் இவரை வல்லவனாக அழகுப்படுத்தி பார்க்கலாம்; பல வெற்றிகள் வந்து சேரும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: குரு பெயர்ச்சியால், பல வெற்றிகள் வந்து சேரும். இதுவரை போராட்டங்களையும், இழப்புகளையும் தந்த குரு, இனி அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறார். எதிர்கால அரசியல் பற்றி, இனி கவலை இல்லை. வெற்றியின் உயரத்தை அடைய, குரு பெயர்ச்சி உதவிகரமாக இருக்கும்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்: அரசியல் முன்னேற்றத்திற்கு, இதுவரை இருந்த தடைகள் விலகும். மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப, உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். அதிரடி அரசியல் ஆரம்பமாகும்.

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி: வேதனை மலரும்; நம்பிக்கை குறையும். கட்சியில் உருவாகும் வதந்திகளால், கட்சியின் நம்பிக்கை கேள்விக்குறியாகும். மிகப்பெரிய அரசியல் குழப்பத்தை சந்திக்க நேரிடலாம்.

நடிகர் ரஜினிகாந்த்: குரு பெயர்ச்சி, யோக நிலையில் உள்ளதால், எதிரிகளும் அன்பு பாராட்டுவர். அரசியலில் ஒரு புதுமை புரட்சியாக, உங்கள் இயக்கம் தொடரும். அதிருப்திகளால் ஒரு சில தலைவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள்; அடக்கி வாசிக்கவும்.தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை: இதுநாள் வரை, ஒவ்வொரு செயலிலும், லாப ஸ்தானத்தில் இருந்த குரு, வெற்றியை வாங்கி தந்தார். இனி, அதுபோன்ற நிலை ஏற்படாது. அரசியல் தலைகீழாக மாறும். நிதானத்துடன் அரசியல் செய்தால், தோல்விகளை தவிர்க்கலாம். அடக்கி வாசிக்கவும்; ஏக வசனம் இனி வேண்டாம். மூத்த அரசியல் தலைவர்களின் ஆலோசனை ஏற்பது நன்மை.
ஜோதிடர் சிவ அண்ணாமலை தேசிகன், விழுப்புரம்:

பிரதமர் நரேந்திர மோடி: குரு இவரின் வாக்கு என்ற வகையில் அக்., 4 முதல் டிச., 20 வரை,  மார்ச் 12 முதல் மே 19 வரை யோக பலனையும் இடைப்பட்ட டிச., 21 முதல் மார்ச் 12 வரை, மே 20 முதல் அக்., 27 வரை விரய பலன்களையும் அளிப்பர். யோக காலமுள்ள நேரத்தில் தேர்தல் நடந்தால் 300 இடங்களை பிடித்து மீண்டும் பிரதமர் ஆவார். மே 20க்கு பிறகு தேர்தல் நடந்தால் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சியை கைப்பற்றுவார். இக்காலத்தில் தேர்தல் நடந்தால் 228 இடங்களை மட்டுமே பா.ஜ., பிடிக்கும்.
காங்., தலைவர் ராகுல்: இவரது தலைமையை ஏற்க கூட்டணி கட்சிகள் விரும்பாது. நட்பான கட்சிகள் அணிமாறும். காங்., 98 இடங்களைப் பெறுவதே மிகவும் சிரமம்.
முதல்வர் பழனிசாமி: டிசம்பர் 20 வரை தர்ம சங்கடமான நிலை உண்டாகும். ஆட்சிக்கு பேராபத்து ஏற்படலாம். இக்காலத்தை தன் திறமையால் சமாளித்தால் ஆட்சி நிலைத்து நிற்கும். பன்னீர்செல்வத்திற்கு ஐந்தாம் இடத்தில் குரு அமர்ந்துள்ளதால் அவரது செல்வாக்கு குறையும். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
ஸ்டாலின்: கூட்டணி கட்சிகள் இவரை விட்டு விலகும். நல்லவர்கள் எல்லாம் விலகி மக்களால் வெறுக்கப்படுபவர்கள் இவருடன் சேருவர். குடும்ப பிரச்சனை தலைதூக்கும். அழகிரி செல்வாக்கு கூடும்.

விஜயகாந்த்: உடல்நிலையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.
ஜோதிடர் சோமசேகரன், ஆற்காடு:

முதல்வர் பழனிசாமி: குரு பெயர்ச்சி மிக சாதகமாக உள்ளதால் பதவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல் விலகும். ஆண்டின் பிற்பகுதியில் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஸ்டாலின்: இவருக்கு குரு மிக நல்ல பலன்களை தர உள்ளார். குருவின் ஏழாம் பார்வை பதவி ஸ்தானத்தை பார்ப்பதால் நன்மை ஏற்படும். உடல் நலத்தில் சற்று கவனம் தேவை.
விஜயகாந்த்: உடல் நலத்தில் சற்றுகவனம் தேவை. கூட்டணி அமைத்து போட்டியிடுவதே மிகவும் நல்லது.
நடிகர் ரஜினிகாந்த்: இவருக்கு குரு மற்றும் சனி சாதகமாக இருந்தாலும் ஜெனன ஜாதகத்தில் புத்திகாரகன் சுக்கிரன் சனியின் வீட்டில் அமர்ந்திருப்பதால் முடிவுகள் எடுப்பதில் மிகவும் கால தாமதம் செய்வார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: இவருக்கு குரு பெயர்ச்சி சாதகமாக இருந்தாலும் பதவி ஸ்தானம் சாதகமாக இல்லாததால் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நன்று.
இவ்வாறு ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Label