OUR CLIENTS
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்!
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்! Posted on 09-Oct-2018 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மஹா புஷ்கரணி ரத யாத்திரை கோலாகலம்!

வேலூர், அக்.9-

இந்த ஆண்டு திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில்  மஹா புஷ்கரணி  11.&10.&2018 அன்று  சிறப்பாக நடைபெற உள்ளது.

புஷ்கரணி என்பது குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மாறுவதாகும். 144 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மஹாபுஷ்கரணி எனப்படும். இந்த ஆண்டு தாமிரபரணியில் மஹாபுஷ்கரணி நடைபெற உள்ளது. இதில் பங்குபெறுவது மிகவும் புனிதமானது. இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்தும் 12 ரதங்கள் (8.&10&.2018) நேற்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, 10&.10&.2018 அன்று மதுரையில் சங்கமித்து அங்கிருந்து அனைத்து ரதங்களும் 11&.10&. 2018 அன்று காலை துறவிகள் பெருமக்கள் வி.எச்.பி.யின் அகில உலக தலைவர் விஷ்ணு சதாசிவ கோகே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரால் மதுரையிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டு தாமிரபரணியைச் சென்றடையும்.

வேலூர் ஸ்ரீபுரத்திலிருந்து ஆன்மிகக்கடல் அருள்திரு சக்தி அம்மாவின் திருக்கரங்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்ட கன்னி ராசிக்குரிய கிருஷ்ணா நதி தீர்த்தம் தாங்கிய தாமிரபரணி மஹா புஷ்கரம் விழிப்புணர்வு ரதம் வேலூரில் இருந்து புறப்பட்டது. புஷ்கரணி சிறப்பு மலர் சக்தி அம்மாவின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. சிறப்பு மலரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன் (கயிறு வாரியத்தலைவர்) பெற்றுக்கொண்டார்.

 வேலூரில் இருந்து புறப்பட்ட ரதம், விசுவ ஹிந்து பரிஷத்தின் மாநில அமைப்பாளர் தர்மாச்சார்யா சம்பர்க், பிரபு சொர்ணலிங்கம், மாநில இணை அமைப்பாளர் சு.வெ.ராமன் ஆகியோர் தலைமையில் சிறப்பான ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது. மலைக்கோடியில் புறப்பட்ட விழிப்புணர்வு ரதம்  பாகாயம் வழியாக  சங்கரன்பாளையம், புதுப்பாளையத்தம்மன் , யோகஸ்ரீ தக்ஷ்ணாமூர்த்தி ஆலயத்தைச் சென்றடைந்தது. அங்கு வி.ஜி.ஹரிதுளசிராமன் பூரணகும்ப மரியாதை அளித்து சிறப்பு பூஜை நடத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட 
பக்தர்கள் மற்றும் வி.எச்.பி. தொண்டர்கள் சிலம்பாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சென்ற ரதம் வேலூர், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம், வி.ஐ.டி., அருகேயுள்ள விநாயகர் கோயில், ராணிப்பேட்டை நவல்பூர் ஆகிய இடங்களில் தாமிரபரணி புஷ்கரம் ரதம் நின்று பக்தர்கள் வழிபாட்டுக்கும் புஷ்கர ரதத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர், பின்னர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் பக்தர்கள் தரிசனம் முடிந்தபின் ஆற்காடு நகர எல்லையில் ஆற்காடு ஸ்ரீமஹாலஷ்மி நர்சிங் கல்லூரி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆற்காடு ஸ்ரீமஹாலஷ்மி நர்சிங் கல்லூரி மற்றும் பள்ளிகளின் மாணவ, மாணவியர் வணங்கி தரிசிக்கவும் ஆசி பெறவும் கல்லூரி வளாகத்தில் நின்று சென்றது. வேலூர் மாவட்டத்தில் இந்த புஷ்கர ரதத்தினுடன் இசை மற்றும் சிலம்பாட்ட கலைஞர்களை ஆற்காடு ஸ்ரீ மஹாலஷ்மி கல்லூரியின் நிறுவனர் டி.எல்.பாலாஜி சிறப்புற ஏற்பாடு செய்து வேலூர் மாவட்டத்தையே குலுங்கச் செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் ஜலகண்டீஸ்வரர் ஆலயம், ராணிப்பேட்டை,  ஆற்காடு ஆகிய நகரங்களை  புஷ்கரணி ரதம் கடந்ததும்  ஆரணி, போளூர், திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, அரூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மதுரையைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டது.

Label