OUR CLIENTS
புகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்!
புகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்! Posted on 09-Oct-2018 புகாரை வாங்க மறுப்பதோடு பொதுமக்களை அலைய வைக்கும் உதவி காவல் ஆய்வாளர்!

வேலூர், அக்.9-

வேலூர் மாவட்டம், காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்களை அலைய வைத்து வருகிறாராம் உதவி காவல் ஆய்வாளர் என்று குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் சரகம் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சட்டம்&ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றுபவர் செந்தில்குமார். எந்த வித புகாராக இருந்தாலும் சரி , இவர் புகாரை வாங்க மறுப்பதோடு அலைகழித்து வருகிறாராம். குறிப்பாக பெண்கள், வயதான முதியோர் அலைகழிப்புக்கு அதிகம் ஆளாகின்றார்களாம். பத்திரம், நகை, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் தொலைந்து விட்டது என்று புகார் கொடுக்கச் செல்பவர்களை இவர் அடிக்காத குறையாக வெளியில் விரட்டி விடுகின்றாராம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் செந்தில்குமார், விநாயகரை சனிபகவான் பிடிக்கச் சென்றபோது விநாயகர் சொன்னாராம் எனது முதுகில் இன்று போய் நாளை வா என்று எழுதி விட்டு செல், நாளை வந்து என்னை பிடித்து கொள் என்று சொன்னாராம். இதை நம்பிய சனி பகவான் முதுகில் எழுதி சென்றாராம். 

இதையடுத்து சனிபகவான் வரும்போதெல்லாம் விநாயகர் முதுகை திருப்பி காண்பித்து விடுவாராம். இதனால் இன்று வரை சனிபகவானால் விநாயகரை பிடிக்க முடியவில்லையாம். இந்த நிலைதான் இன்று போய் நாளை வா என்று புகார் கொடுக்கச் செல்பவர்களை அலைய வைக்கிறாராம் இந்த கடமை தவறாத உதவி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதுமட்டுமின்றி புகார் அளிப்பவர்களிடம் அதிகாரம் என்னிடம் இல்லை என்றும் நாளை வந்து   வேறொரு உதவி காவல் ஆய்வாளரிடம் கொடுக்கும்படி கை காட்டுகின்றார். அவரிடம் சென்றால் நானில்லை, அவரிடம் செல்லுங்கள் என்று ஒருவர் ஒருவராக பந்தாடுகின்றனர். இவ்வாறாக செந்தில்குமார், நாராயணன்,  புகார் கொடுக்க வருபவர்களை பந்தாடுகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனுக்களை அனுப்பி வருகின்றனர்.

 விருதம்பட்டு காவல் நிலையத்தில் பொதுமக்கள் தரும் புகார் மனுக்களை வாங்கி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label