OUR CLIENTS
இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வெய் ராஜினாமா
இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வெய் ராஜினாமா Posted on 09-Oct-2018 இண்டர்போல் தலைவர் மெங் ஹாங்வெய் ராஜினாமா

லியோன், அக்.9-

சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல் அமைப்பான இண்டர்போல் தலைவர் பற்றியே மர்மமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இண்டர்போல் தலைவர் பொறுப்புவகித்து வந்த மெங் ஹாங்வெய் ராஜினாமா செய்துள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காவல் அமைப்பான இண்டர்போலுக்கு முதன்முறையாக சீனாவிலிருந்து மெங் ஹாங்வெய் என்பவர் பொறுப்பை ஏற்றார். அவர் ஒரு முறை சீனாவில் பொது பாதுகாப்பு துணை அமைச்சராகப் பணியாற்றினார். குற்றவியல் நீதி மற்றும் காவல் ஆகிய துறைகளில் 40 ஆண்டுகால அனுபவம் அவருக்கு உண்டு.
செப்டம்பர் 28 வெள்ளியன்று பிரஞ்சு அதிகாரிகள் அவரது காணாமல் போன செய்தியை வெளியிட்டனர்.
அதேநாளில் சமூக வலைதளம் வாயிலாக தனது கணவர் தனக்கு ஒரு தகவல் பரிமாறிக்கொண்டதாக மெங்கின் மனைவி தெரிவித்துள்ளார்.  அதில் ''பிறகு தொலைபேசி செய்கிறேன்'' ஒரு பதிவு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இத்தகவல் வருவதற்கு முன்பு ஆபத்தைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக சமையலறையில் இறைச்சிவெட்ட பயன்படுத்தும் கத்திப்படத்தை அனுப்பியதாக தெரிவித்த அவரது மனைவி, தனது கணவரின் உயிருக்கு ஆபத்து என்று தான் அச்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவர் காணாமல் போன செய்தியை இண்டர்போல் வெளியிட்டதிலிருந்து எதுவும் பேசாமல் இருந்த பெய்ஜிங், பின்னர் மெங்கை சிறையில் அடைத்துள்ளதாக ஒப்புக்கொண்டது.
ஒரு வரி அறிக்கையை வெளியிட்டுள்ள பெய்ஜிங் அதில் ''அவர்மீது நடைபெற்று வரும் விசாரணையின்படி அவர் சட்டத்தை மீறியுள்ளதாக தாங்கள் சந்தேகிக்கிறோம்'' என்று தெரிவித்தது.
இந்நிலையில் சட்டத்தை மீறிய வகையில் அவர் தொடர்ந்து இண்டர்போல் பதவியில் இருக்கக் கூடாது என்று எதிர்ப்புகளும் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து அவரது ராஜினாமா கடிதம் இண்டர்போல் அலுவலகத்திற்கு வந்துள்ளது. அவர் எப்படி காணாமல் போனார் யார் அழைத்துச் சென்றனர். பெய்ஜிங் எதற்காக அவரை கைது செய்து விசாரணை செய்துவருகிறது போன்ற தகவல்கைள் மர்மமாகவே உள்ளன.

இந்நிலையில் தற்போதுள்ள பதவிக்காலத்தின்படி மீதமுளள இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு புதிய இண்டர்போல் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டம் துபாயில் வரும் நவம்பர் 18லிருந்து 21 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Label