OUR CLIENTS
சிலை கடத்தல் வழக்கு - ரன்வீர்ஷா,கிரண் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு
சிலை கடத்தல் வழக்கு - ரன்வீர்ஷா,கிரண் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு Posted on 09-Oct-2018 சிலை கடத்தல் வழக்கு - ரன்வீர்ஷா,கிரண் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு

சென்னை

சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக ரன்வீர்ஷா மற்றும் கிரண் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட சாமி சிலைகள் குறித்து பதிவான வழக்கை ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தனிப்படை போலீசார் பலரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா, கிரண் ஆகியோர் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சாமி சிலைகள், பழங்கால கோவில் கல் தூண்கள் உள்பட ஏராளமான புராதான சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டன.

அவர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஏ.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளன் என்பவருக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் பழங்கால பொருட்களின் மீதான ஆசையினால், 1993ம் ஆண்டு முதல் இவற்றை சேகரிப்பதாகவும், இந்த பொருட்களுக்கு எல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது என்றும் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் கூறினார்கள்.

இந்த பழங்கால பொருட்கள் எப்போது, யாரிடம் இருந்து வாங்கப்பட்டது? என்பதற்கான ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 11ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Label