OUR CLIENTS
அரசு பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன் Posted on 09-Oct-2018 அரசு பள்ளிகளில் இணைய வசதியுடன் கூடிய கணினி வகுப்புகள்- அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை 

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 285 தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு உதவியுடன் 670 பள்ளிகளில் அதிநவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். 

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் இணையதளம் மூலம் இணைக்கப்படும். நவம்பர் மாத இறுதிக்குள் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்பறைகளை ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றும் பணி நிறைவடையும் என தெரிவித்தார். 

Label