OUR CLIENTS
நக்கீரன் கோபால் கைது : சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
நக்கீரன் கோபால் கைது : சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் Posted on 09-Oct-2018 நக்கீரன் கோபால் கைது : சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை

நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்தபோது போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.  

பல மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நக்கீரன் கோபால் கைது கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் கடும் விளைவுகளை இந்த ஆட்சி சந்திக்க நேரிடும். நக்கீரன் கோபால் கைது சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது.

நீதிமன்றம், காவல்துறை பற்றி பேசிய ஹெச்.ராஜாவை போலீஸ் கைது செய்யவில்லை. பாஜகவுக்கு ஒரு நீதி, அதனை எதிர்க்கும் பிற கட்சிகளுக்கு ஒரு நீதியா?. பெண்களை இழிவாக பேசிய எஸ்.வி.சேகரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Label