OUR CLIENTS
தென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்!
தென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்! Posted on 10-Oct-2018 தென்னை மரம் ஏறி அசத்திய பெண்கள்!

கோபிசெட்டிபாளையம், அக்.10-

தென்னை மரங்களின் நண்பர்கள் என்ற தலைப்பில் கோபி வேளாண் அறிவியல் நிலையத்தில் தொடங்கிய பயிற்சியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தென்னை மரம் ஏறி அசத்தினர்.

சென்னையை தலைமை யிடமாக கொண்டு இயங்கும் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மண்டல அலுவலகம் மற்றும் கோபி வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து தென்னை மரங்களின் நண்பர்கள் என்ற தலைப்பில் நேற்று, பயிற்சி நடத்தின. கோபி வேளாண் அறிவியல் நிலைய முதன்மை விஞ்ஞானி அழகேசன் தலைமை வகித்தார்.  இந்த பயிற்சி ஆறு நாட்கள் நடக்கிறது. தென்னை சாகுபடி முறை, உரமிடுதல், பூச்சி மேலாண்மை, கூடுதல் மகசூல் பெறும் வழிமுறை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

குறிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட கருவி மூலம் தென்னை மரம் ஏறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வசதியாக மனதை ஒருநிலைப்படுத்தி யோகா மூலம், முதலில் மூச்சு பயிற்சி அளிக்கப்பட்டது. தென்னை மரம் ஏறும் பயிற்சியை பரமேஸ்வரன் அளித்தார்.

ஆண்கள் 11 பேரும், பெண்கள், ஒன்பது பேரும் பயிற்சி பெற்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் நவீன கருவி உதவியுடன் மரம் ஏறி அசத்தினர்.முதன்மை விஞ்ஞானி அழகேசன் பேசியதாவது: மாடு மற்றும் தென்னை மரம் இல்லாதவர் விவசாயி கிடையாது என கூறுவர். முழு மனதோடு பயிற்சி பெற வேண்டும். தென்னை மரம் ஏறுவது அற்புதமான புனிதமான தொழிலாகும். இப்பயிற்சி பெறுவதால் வருவாய் ஈட்ட முடியும். தென்னை சாகுபடி முதல் அறுவடை வரை சகலமும் பயிற்சி அளிக்கப்படும்.பெண்கள் சுடிதார் அணிந்திருந்தால் பயிற்சி பெறுவது சுலபம். நீரா இறக்குவது போன்ற குழுக்களுக்கு, ஆட்கள் தேவைப்படும். இப்பயிற்சி பெற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும். கடமைக்காக பயிற்சி பெறாமல் விருப்பத்துடன் பயிற்சி பெற்று பயனடைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Label