OUR CLIENTS
ஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு!
ஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு! Posted on 10-Oct-2018 ஐ.ஜி., மனைவி செலவு ரூ.3,330 காரைக்குடி ஸ்டேஷன் கணக்கு!

காரைக்குடி, அக். 10-

ஐ.ஜி., மனைவிக்கு 3,300 ரூபாய் செலவழிக்கப்பட்டதாக காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் கணக்கு எழுதப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன் செலவு கணக்கு என வாட்ஸ் ஆப்பில் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஐ.ஜி., மனைவிக்காக 3,300 ரூபாய் என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர் இல்லாததால் எஸ்.ஐ., அரவிந்தராஜன் பொறுப்பு அதிகாரியாக உள்ளார். இங்கு பணி செய்வோருக்காக காரைக்குடி நார்த் பி.எஸ்., என்ற வாட்ஸ் ஆப் குழு உள்ளது. இதில் ஸ்டேஷன் வரவு - செலவு கணக்கு என எழுதப்பட்ட விபரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 இது மற்றவர்களின் வாட்ஸ் ஆப்க்கும் பரப்பப்பட்டுள்ளது. இதில் செப்., 2 முதல், 27 வரை செலவு விபரம் உள்ளது. எச்.சி., - ஹெட் கான்ஸ்டபிள் 1371 தனபால் ஹலோ போலீஸ் டயர் மாற்ற 1,000 ரூபாய், நோட்டு வாங்கியது 250 ரூபாய், ஐ.ஜி., சார் மனைவி பர்சேஸ் 3,300 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.எஸ்.ஐ., அரவிந்தராஜனிடம் கேட்ட போது இதை யாரோ போலியாக உருவாக்கி உள்ளனர். என் போன் எண்ணை அதில் பதிவிட்டுள்ளனர். ஸ்டேஷன் வரவு, செலவு கணக்கு எதுவும் கிடையாது. நான் நேர்மையாக இருப்பதால் இதுபோன்று வெளியிட்டுள்ளனர். வெளியிட்டது யார் என விசாரிக்கிறோம் என்றார்.

Label