OUR CLIENTS
கண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
கண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்! Posted on 10-Oct-2018 கண்ணமங்கலத்தில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!

வேலூர், அக்.10-

கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருவண்ணாமலை டூ வேலூர் செல்லும் சாலையில் சுமார் அரை மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

 கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த 30 பெண்கள் திடீர் என சாலை மறியலில் ஈடுபட்டனர். கண்ணமங்கலம் பாரத ஸ்டேட் வங்கியில் ஆதார் எண் இணைப்பு வேண்டி காலையில் இருந்து வெளியில் காத்துக்கொண்டு இருப்பதால் பாங்க் உள்ளே அனுமதிக்கவிலை என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நூறு நாள் வேலை மற்றும் முதியோர் பணம் கடந்த மூன்று மாதமாக வழங்கவில்லை என்ற காரணத்தால் நூறு நாள் திட்டத்தில் வேலையாட்களின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்துவிட்டனரா என்கிற சந்தேகத்தினால், கடந்த மூன்று மாதமாக வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்  விநாயகமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் செய்தவர்களிடம்  சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.

Label