OUR CLIENTS
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி உறுதி- அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி உறுதி- அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு! Posted on 10-Oct-2018 ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி உறுதி- அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு!

புதுடெல்லி, அக்.10-

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே  நவம்பரில் ஈரானிடமிருந்து  கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது குறித்து  புதுடெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திங்கட்கிழமை கூறும்போது, "எங்களது சொந்த நாட்டுத் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்காக  கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இருக்கிறோம். எங்கள் தேவைகளை உலகத் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் தடையையும் மீறி ஈரானிலிருந்து  90 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நவம்பர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்யும் என்பது உறுதியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4&ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.
ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Label