OUR CLIENTS
பயனாளர்களின் விவரங்கள் கசிவு- மூடப்படுகிறது சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’வலைதளம்!
பயனாளர்களின் விவரங்கள் கசிவு- மூடப்படுகிறது சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’வலைதளம்! Posted on 10-Oct-2018 பயனாளர்களின் விவரங்கள் கசிவு- மூடப்படுகிறது சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’வலைதளம்!

மவுண்ட்டன் வியூ, அக்.10-

பிரபல சமூகவலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016&ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், டிரம்பின் பிரச்சார நடவடிக்கைகளை, இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனம் மேற்கொண்டது. அந்த நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களைத் திருடி, அதன் மூலமாக, அவர்களின் விருப்பு, வெறுப்புகளை அறிந்து கொண்டு, அவற்றை டிரம்புக்குச் சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதன்பிறகு சமூகவலைதளங்களை கண்காணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளிலும் சமூகவலைதளங்களின் கட்டுப்பாடற்ற செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடப்பட்டு வருகிறது.

இதனிடையே பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் பயனாளர்களின் கணக்குகளில் பெரியஅளவு பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 5 கோடி பேரின் கணக்குகள் ‘ஹேக்’ செய்யப்பட்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பை சந்தித்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என பேஸ்புக் நிறுவனம் கூறியது.

இந்தநிலையில், மற்றொரு சமூகவலைதளமான ‘கூகுள் பிளஸ்’ பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், அதனை சரியான முறையில் கண்டறிந்து தீர்வை தேடுவதற்கு அந்நிறுவனம் தவறி விட்டதாகவும் ‘வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ‘கூகுள் பிளஸ்’ சமூகவலைதளத்தை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறி விட்டதாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் இந்த முடிவை எடுப்பதாக ‘கூகுள் பிளஸ்’ அறிவித்துள்ளது.

Label