OUR CLIENTS
சிலைகள் பறிமுதல் விவகாரம்- சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
சிலைகள் பறிமுதல் விவகாரம்- சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு Posted on 10-Oct-2018 சிலைகள் பறிமுதல் விவகாரம்- சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

முன்ஜாமீன் வழங்கக் கோரி ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் மற்றும் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. 

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஏற்றுமதியாளர் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து 224 சிலைகளைக் கைப்பற்றினர். இதுதொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. ரன்வீர் ஷா வட இந்தியா சென்றுள்ளதால் மற்றொரு நாளில் ஆஜராவதாக அவரது தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தங்கராசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் கடிதம் கொடுத்தார். 

இந்நிலையில் போயஸ் தோட்டம் கஸ்தூரி எஸ்டேட் 3-ஆவது தெருவில் வசித்து வரும் பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வீட்டில் சோதனை நடத்தி, பூமிக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 சிலைகளையும் பழங்காலத் தூண்களையும் பறிமுதல் செய்தனர். முன் ஜாமீன் கோரி மனு: இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க கிரண் ராவ் உள்ளிட்ட 7 பேருக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அழைப்பாணை அனுப்பினர். 

இது தொடர்பாக ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவ் தரப்பினர் அக்டோபர் 9-ஆம் தேதி கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ரன்வீர்ஷா மற்றும் கிரண் ராவ் சார்பில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆசை காரணமாக..இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. சிலை கடத்தல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான தீனதயாளனுக்கும், தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பழங்காலப் பொருள்களின் மேல் உள்ள ஆசையின் காரணமாக கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் இவற்றைச் சேகரித்து வருகிறோம். 

இந்தப் பொருள்களுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொல்லியல் துறையிடமிருந்து முறையான சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் உத்தரவு: இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் வாங்கிய சிலைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு சான்றிதழ் பெற்றது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுபோன்ற பழங்காலப் பொருள்கள் யாரிடம், எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பான ஆதாரங்களையும், சான்றிதழ்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர். 

Label