OUR CLIENTS
மு.க.ஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி
மு.க.ஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி Posted on 10-Oct-2018 மு.க.ஸ்டாலின், வைகோவை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி

சென்னை

தாம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து நக்கீரன் கோபால் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் குறித்து அவதூறாக செய்தி வெளியிட்ட நக்கீரன் கோபால் நேற்று புனே செல்வதற்காக சென்னை விமான நிலயத்தில் காத்திருந்தபோது கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் மீது தேசத் துரோக வழக்கையும் காவல்  துறையினர் பதிவு செய்தனர்.

ஆளுநர் மாளிகை புகார் கொடுத்ததைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிந்தாதிரிபேட்டை துணை ஆணையர் அலுவலகத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். எனினும் நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்து விட்டது. மேலும் அவர் மீது போடப்பட்ட 124 வது பிரிவையும் நீதிபதி ரத்து செய்தார். தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை நக்கீரன் கோபால் இன்று நேரில் சந்தித்தார். அப்போது தனக்கு ஆதரவாக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றி தெரிவித்தார். முன்னதாக நக்கீரன் கோபால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

Label