OUR CLIENTS
நாளை கரையைக் கடக்கிறது டிட்லி புயல்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
நாளை கரையைக் கடக்கிறது டிட்லி புயல்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் Posted on 10-Oct-2018 நாளை கரையைக் கடக்கிறது டிட்லி புயல்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்

சென்னை

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் நாளை கரையைக் கடக்கவிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டிட்லி புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது ஒடிசாவில் இருந்து 320 கி.மீ., தொலைவில் மையம்கொண்டுள்ள இந்த புயலானது நாளை ஒடிசாவின் கோபால்பூர்-கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் கரையை கடக்கும். 

இதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, மத்திய மேற்கு, வடக்கு வங்கக்கடல் பகுதிக்கு அக்டோபர் 11 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு அக்டோபர் 14 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம். 
மேலும் லூபன் புயல் வலுப்பெற்று ஓமனிலிருந்து 610 கி.மி. தொலைவில் நிலைகொண்டுள்ளது. அதிகபட்சமாக சின்ன கல்லாறு பகுதியில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Label