OUR CLIENTS
ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்!- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி
ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்!- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி Posted on 16-Oct-2018 ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிகள்!- போலி உறுப்பினர்கள் களையெடுக்க புதுயுக்தி

வேலூர், அக்.16-

ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்கள் பட்டியலை போன் செய்து உறுதி செய்யும் தலைமை நிர்வாகிளால் மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் கலக்கமடைந்துள்ளனர். போலி உறுப்பினர்களை களையெடுக்க புதுயுக்தி என்று சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்றத்தில் ரஜினி ரசிகர்களை தூக்கிவிட்டு சம்மந்தமில்லாத நபர்களை நியமித்து வருவதாக மாநிலம் முழுவதும் இருந்து புகார்கள் வந்தன. இந்நிலையில் மாநில அமைப்புச் செயலாளர் டாக்டர் இளவரசன் சீது எழும் புகார்களை சொல்லி மாளாது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த சீராய்வு கூட்டத்தில் பிரச்னை பெரிதாக வெடித்துள்ளது. ரஜினி மக்கள் மன்றத்தில் இதுவரை நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான சீராய்வு கூட்டம் அக்டோபர் 5,6,9,10,11 ஆகிய தேதிகளில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 5ம் தேதி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு காரில் நிர்வாகிகள் வந்தனர். நிர்வாகிகள் நியமன பிரச்னை பற்றி பேச அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறைகளை மட்டும் கூறுமாறு உத்தரவு போட்டுள்ளார் இளவரசன். குறிப்பாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக மன்றத்தில் இருந்தவர்களை அதிரடியாக நீக்கியுள்ளனர். அதற்கு பலர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இந்நிலையில் உறுப்பினர்கள் சேர்க்க கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மாவட்டம், ஒன்றியம், வட்டம், வார்டு வாரியாக தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் திருப்தியடையாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த விண்ணப்ப படிவங்களில் இருந்து ஏதாவது ஒரு விண்ணப்பத்தை தேர்வு செய்து எடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு போன் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்துள்ளார். இதில் பல முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருப்பதை நேரடியாகவே  ரஜினிகாந்த் கண்டுபிடித்தார். இதையடுத்து எரிச்சலடைந்த ரஜினி பட்டியலை மறுபரிசோதனை செய்ய மீண்டும் உறுப்பினர் பட்டியல் தயாரிக்கும் பணியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மீண்டும் அந்த விண்ணப்ப படிவங்களை வைத்து கொண்டு பெயர்களை சரிபார்க்கும் பணியை மன்ற நிர்வாகிகள் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதனால் போலி உறுப்பினர்களை களையெடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே இப்படி என்றால் கட்சி ஆரம்பித்து விட்டால் இன்னும் என்னவென்னால் நடக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று சொல்கின்றனர். பொறுப்பு தருவதில் இருந்து பொறுப்புக்களை பறிக்கும் வரையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் சொல்கின்றனர். ரஜினியை நம்பி இருந்த ரஜினி ரசிகர்கள் 30 ஆண்டுக்கும் மேலாக காத்திருந்தவர்கள் எல்லாம் இன்று எச்சில் இலை மாதிரி உதாசீனப்படுத்தப் பட்டுள்ளனர். இந்தநிலை தொடருமேயானால் கட்சியில் கடைசியில் ஒருவர் கூட மிஞ்சமாட்டார்கள் என்கின்றனர் விரக்தியுடன் என்று சொன்னால் அது மிகையாகாது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ரஜினி அரசியலில் நுழைவதற்குள்ளாக களையெடுப்பு அதிகம் காணப்படும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதையே அரசியல் நோக்கர்களும் கருத்தாக தெரிவித்துள்ளனர். நிலைமை போகப் போக எந்த நிலைக்குச் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

Label