OUR CLIENTS
சுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு!
சுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு! Posted on 16-Oct-2018 சுரண்டையில் கொட்ட வந்த கேரளகழிவுகள் அதிகாரிகள் சுற்றி வளைத்து அபராதம் விதிப்பு!

திருநெல்வேலி, அக்.16-

சுரண்டை அருகே கேரள கழிவுகள் கொட்டப்பட்டதை கண்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஒருவருக்கு  அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள விந்தன்கோட்டை பகுதியில் கேரள கழிவுகளான ரத்தம் சொட்டும் பஞ்சுகள், சில மருத்துவ உபகரணங்கள் மக்காத தெர்மோகோல் துண்டுகள், பாலீதீன் கவர்கள், உணவு கழிவுகள், உபயோகித்த உணவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதாகவும் அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும  அதன் அருகில் உள்ள கிடங்கில் பாலீதீன் கழிவுகளை பெட்ரோல் ஊற்றி தீவைப்பதாகவும் அதனால் புகை மண்டலம் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. இதனையடுத்து அதிரடியாக செயல்பட்ட கடையநல்லூர் தாசில்தார் தங்கராஜ், சாம்பவர்வடகரை எஸ்ஐ சின்னதுரை, சாம்பவர்வடகரை பேரூராட்சி நிர்வாக அதிகாரி அபுல்கலாம் ஆசாத், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் மாரியப்பன், மேஸ்திரி முருகன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அப்பகுதியில் கழிவுகளை கொட்டிய லாரியை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த சகுந்தர் ஷாபி என்பவர் கொச்சி பகுதியிலிருந்து மருத்துவ கழிவு மற்றும் உயர் ரக ஓட்டல்களில் இருந்து   சேகரிக்கப்படும் உணவு பேக்கிங் கழிவுகளை ரெகுலராக கொண்டு வந்து விந்தன் கோட்டை & சுந்தரபாண்டியபுரம் ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் கொட்டி சாதாரண ஏழை பெண்களை வைத்து குறைந்த சம்பளத்தில் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தரம் பிரித்து அதனை உருக்குவதற்க்காக தென்காசி ரோட்டில் உள்ள பாட்டாக்குறிச்சியில் இயங்கும் மில்லில் மறு சுழற்சி செய்வதும் அப்பகுதியிலும் சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் வகையில் நாற்றம் எடுப்பதும் மீதம் உள்ள கழிவுகள் மற்றும் பாலீதீன் கழிவுகளை. விந்தன்கோட்டையிலேயே பெட்ரோல் ஊற்றி தீவைப்பதும் அதிலிருந்து வரும் புகையினால் மூச்சு திணறல் மற்றும் கேன்சர், நுரையீரல் பாதிப்பு வரலாம் என்பதையும் கண்டறிந்தனர். 

இதனை முன்னிட்டு தாசில்தார் தங்கராஜ் பரிந்துரையின் பேரில் கழிவுகளை கொண்டுவந்த கேரளாவைச் சேர்ந்த சகுந்தர் ஷாபிக்கு ரூ. 75ஆயிரமும், சுகாதார கேட்டை உருவாக்கும் வகையில் இடத்தை கொடுத்த சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த முத்துப்பாண்டியன் மகன் பொன்னுசாமி என்பவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இது குறித்து கூறிய தாசில்தார் தங்கராஜ் சுகாதாரத்தைச் சீரழிக்கும் மற்றும் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவுக்கும் கழிவுகளை வருவித்து கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

Label