OUR CLIENTS
அரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!
அரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்! Posted on 17-Oct-2018 அரசு மருத்துவமனையில் குப்பையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!

விருதுநகர், அக்.17-

 அரசு தலைமை மருத்துவமனையில், குப்பையில் வீசும் மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். 

விருதுநகரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இந்த மருத்துவமனையில் 400 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் துப்புரவு உள்ளிட்ட பல பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. 

மருத்துவமனை விரிவாக்கத்திற்கு ஏற்ப, துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை.  தனியார் நியமன ஊழியர்களுக்கும் குறைந்த ஊதியம் வழங்குகின்றனர். மருத்துவமனை கழிவுகளான ஊசி மற்றும் அறுவை சிகிச்சை கையுறைகள், ரத்த ஏற்றும் டியூப், ஊசி மருந்துபாட்டில்கள் ஆகியவற்றை தனியார் வேன் மூலம் எடுத்துச் செல்லப்படும். 

ஆனால், மருத்துவமனை வளாகத்தில் மனநோய் மற்றும் தொற்றா நோய் பிரிவுக்கு பின்புறம் குப்பையில் தற்போது மருத்துவக் கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த பாதை வழியாக குழந்தைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சென்று வரும் நிலையில், பயன்படுத்தப்பட்ட ஊசிகள் குப்பையில் கிடப்பதால், கால்களில் குத்தி 
விபரீதம் ஏற்படவும், சுகாதாரக்கேடும் ஏற்படும். எனவே, மருத்துவமனையில் வளாகத்தில் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை குப்பையில் கொட்டாமல், முறையாக அப்புறப்படுத்த தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Label