OUR CLIENTS
ஆள் கடத்தலுக்கு எதிராக போராடும்- இந்திய பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் விருது!
ஆள் கடத்தலுக்கு எதிராக போராடும்- இந்திய பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் விருது! Posted on 22-Oct-2018 ஆள் கடத்தலுக்கு எதிராக போராடும்- இந்திய பெண்ணுக்கு வெள்ளை மாளிகையில் விருது!

ஹூஸ்டன், அக்.22-

மனித கடத்தலுக்கு எதிராக போராடி வரும் இந்திய-அமெரிக்கப் பெண்ணான மினால் பட்டேல் டேவிஸுக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரின் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஹூஸ்டன் நகர மேயர் சில்வஸ் டர் டர்னருக்கு சிறப்பு ஆலோச கராக (மனிதக் கடத்தலைத் தடுத்தல்) செயல்பட்டு வருபவர் மினால் பட்டேல் டேவிஸ். கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அமைச்சர் மைக் பாபம்பியோ இந்த விருதை மினாலுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் இந்தத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாகும் இது. இதுகுறித்து மினால் பட்டேல் டேவிஸ் கூறும் போது, “இந்த விருதைப் பெற்றதை நம்பமுடியவில்லை. என்னுடைய பெற்றோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் நான் அமெரிக்காவில்தான் பிறந்தேன். பெண்ணாக இருந்தாலும் துணிச்சலாக மனிதக் கடத்தலுக்கு எதிராகப் போராடி வருகிறேன். மனிதக் கடத்தலைத் தடுக்க பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்” என்றார்.

Label