OUR CLIENTS
டெண்டர் முறைகேடு புகார் - சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை மேல் முறையீடு
டெண்டர் முறைகேடு புகார் - சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை மேல் முறையீடு Posted on 22-Oct-2018 டெண்டர் முறைகேடு புகார் - சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை  மேல் முறையீடு

புதுடெல்லி, அக்.22-

 முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில்  லஞ்ச ஒழிப்பு போலீஸ்  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் மனுதாரர் முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க  உயர்நீதிமன்றத்தில்  உத்தரவிட்டு உள்ளது.

3 மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணையை சிபிஐ முடிக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் என  உயர்நீதிமன்றத்தில் உத்தரவிட்டு உள்ளது. ஒரு வாரத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில்  முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிராக லஞ்சஒழிப்புத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு விரைவில்  அவசர வழக்காக  விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

Label