OUR CLIENTS
மு.கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்!
மு.கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்! Posted on 24-Oct-2018 மு.கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்!

கோலார் தங்க வயல், அக்.24-

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டம் தங்கவயல் திமுக சார்பில் ஆண்டரசன்பேட்டையில் நடந்தது.

கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந .ராமசாமி தலைமையில் நடந்தது. இதில் திமுக பிரமுகர் முனிரத்தினம் பேசும் போது, கலைஞர் என்பது ஒரு சரித்திரம், எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், பத்திரிக்கையாளர், கட்சி தலைவர், ஆட்சி தலைவர், உறங்காத படைப்பாளி , ஓயாத போராளி என்று எந்த துறையை தொட்டாலும் அந்த துறையில் வித்தகம் காட்டிய வித்தகர். தொல்காப்பியம், குறளோவியம், சங்கத்தமிழ், சிலப்பதிகார நாடகம், ரோமாபுரி பாண்டியன் , தென்பாண்டிச்சிங்கம் , திருக்குறள் உரை போன்ற படைப்புகளால் கலைஞர் காலத்தை வென்று நிற்பவர்.

முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவருக்கு, மேலும் மாநிலத்தில் முதல்வராக இல்லாத ஒருவரின் இறப்பிற்கு பாராளுமன்ற இரு அவைகளும் இரங்கல் தீர்மானம் வாசித்து நாள் முழுக்க இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்ற கட்டடத்தில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. பிரிவினை பேசியவர் என்று கூக்குரல் இட்டார்கள் . ஆனால் நாடு முழுவதும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறந்தது. இருபத்து ஆறு மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இப்படி ஒரு தலைவன் உருவாக வாய்ப்பே இல்லை என்று உலகமே அஞ்சலி செலுத்தியது. அவர் புகழ் என்றும் மறையாது என்றார்.

Label