OUR CLIENTS
200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு!
200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு! Posted on 24-Oct-2018 200 கோடி ரூபாய் மானநஷ்ட வழக்கு!

திருமலை, அக்.24-

திருமலை திருப்பதி தேவஸ்தான ஆலய முன்னாள் முதன்மை அர்ச்சகர்  மீதும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மீதும் வழக்குத் தொடுத்தது தேவஸ்தானம். 

சில மாதங்களுக்கு முன்னர் திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை அர்ச்சகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது பல்வேறு புகார்களை எழுப்பி செய்தியாளர்களை சந்தித்தார். இதனை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் சீனிவாச பெருமாள் மீது அவதூறு பரப்பியதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் முதன்மை அர்ச்சகர் ரமண தீட்சிதர் மற்றும் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் சிம்ம ரெட்டி மீது 200 கோடி ரூபாய் மானநஷ்ட கோரி வழக்கு தொடுத்தது. 

இதற்கு என்று நீதிமன்றத்தில் 2 கோடியே நாலாயிரத்து 85 2 ரூபாய் கட்டணம் செலுத்தி உள்ளது. இவ்வாறு ஒரு தர்மம் ஸ்தாபனம் அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு கோரியது. இந்தியாவில் இதுவே முதல் முறை. பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்படும் பணத்தை விரயம் செய்துள்ளது சரியல்ல என்றும் அவர் கூறினார். உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியோடு வந்து வழிபடும் திருமலை ஏழுமலையான் மீது அவதூறு பரப்பியதாக திருப்பதி தேவஸ்தானம் பணத்தை விரயம் செய்து வழக்கு தொடர்வது சரியல்ல என்று பாரதிய ஜனதா கட்சி நகர பிரமுகர் ஸ்ரீநிவாஸ் செய்தியாளர்களிடம் ஆட்சேபனை தெரிவித்தார்.

Label