OUR CLIENTS
ஜமால் படுகொலைக்கு சவுதி அரேபியா விளக்கம் திருப்திகரமாக இல்லை- டிரம்ப்
ஜமால் படுகொலைக்கு சவுதி அரேபியா விளக்கம் திருப்திகரமாக இல்லை- டிரம்ப் Posted on 24-Oct-2018 ஜமால் படுகொலைக்கு சவுதி அரேபியா விளக்கம் திருப்திகரமாக இல்லை- டிரம்ப்

வாஷிங்டன், அக்.24-

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை குறித்து சவுதி அரேபியா அரசு அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர், அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர், மாயமானார்.

அவர் அந்த தூதரகத் துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப் பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது. பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணை தூதரகம் சென்று விசாரித்தனர்.

இதற்கிடையே, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டார் என சவுதி அரேபியா உறுதி செய்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை குறித்து சவுதி அரேபியா அரசு அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், வாஷிங்டன் போஸ்டில் கட்டுரைகள் எழுதி வந்தவர் ஜமால் கசோக்கி. கடந்த 2&ம் தேதி இஸ்தான்புல் தூதரத்துக்கு சென்ற இவர் மாயமானார். அங்கு அவர் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை குறித்த சவுதி அரேபிய அரசின் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. விரைவில் உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம் என தெரிவித்தார். 

Label