OUR CLIENTS
வெற்றி முனைப்பில் இந்திய அணி சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு
வெற்றி முனைப்பில் இந்திய அணி சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு Posted on 24-Oct-2018 வெற்றி முனைப்பில் இந்திய அணி சச்சின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு வாய்ப்பு

விசாகப்பட்டினம், அக்.24-

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாக இந்தியாவிடம் இழந்த நிலையில் தற்போது 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

குவஹாட்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் இன்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

குவஹாட்டியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 323 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 47 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 152 ரன்களும், கேப்டன் விராட் கோலி 140 ரன்களும் விளாசினர். எந்தவித தாக்கமும் இல்லாத மேற்கிந்தியத் தீவுகள் பந்து வீச்சை இவர்கள் புரட்டி எடுத்தனர். இந்த ஜோடி மீண்டும் ஒரு முறை மிரட்ட ஆயத்தமாக உள்ளது. முதல் ஆட்டத்தில் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்த ஷிகர் தவண் இன்றைய ஆட்டத் தில் மட்டையை சுழற்ற முயற்சி செய்யக்கூடும். விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் 81 ரன்கள் எடுத்தால் விரைவாக 10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்ததே சாதனையாக உள்ளது. 29 வயதான விராட் கோலி இதுவரை 204 இன்னிங்ஸ்களில் விளையாடி 58.69 சராசரியுடன் 9,919 ரன்கள் குவித்துள்ளார். இதில் 36 சதங் களும், 48 அரை சதங்களும் அடங் கும். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை கடந் தால் சச்சின் சாதனையை முறி யடித்து புதிய சாதனை நிகழ்த்து வார். இந்த சாதனையை விராட் கோலி, விசாகப்பட்டினத்தில் நிகழ்த் தக்கூடும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இன்றைய ஆட்டத்தில் பந்து வீச்சு துறையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

முதல் ஆட்டத்தில் மொகமது ஷமி 10 ஓவர்கள் வீசி 81 ரன்களை வாரி வழங்கினார். அதேவேளை யில் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட உமேஷ் யாதவும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறினார். அவர் வீசிய 10 ஓவர்களிலும், இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளரான கலீல் அமகது வீசிய 10 ஓவர்களிலும் தலா 64 ரன்கள் சேர்க்கப்பட்டது. சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஜடேஜாவும் (66 ரன்கள்) வாரி வழங்கினார். யுவேந்திர சாஹல் மட்டுமே 41 ரன்களை வழங்கி ஆறுதல் அளித்தார். அவருக்கு உறுதுணையாக செயல்படும் வகையில் இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படக்கூடும். இதனால் கலீல் அமகது அல்லது ஷமி நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படத் தவறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி 322 ரன்களை குவித்தது. இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனத்தை அந்த அணி பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பயன்படுத்தினர். அதிலும் குறிப்பாக சிம்ரன் ஹெட்மையர், கெய்ரன் பொவல் சிறப்பாக விளையாடினர். 78 பந்துகளில் 106 ரன்கள் விளாசிய ஹெட்மையர், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கக்கூடும். அனுபவ வீரரான மார்லன் சாமுவேல்ஸ், ஷாய் ஹோப் ஆகியோரும் மட்டையை சுழற்றும் பட்சத்தில் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, உமேஷ் யாதவ், கலீல் அகமது.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பேபியன் ஆலன், சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, சந்தர்பால் ஹேம்ராஜ், சிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், கெய்ரன் பொவல், ஆஷ்லே நர்ஷ், கீமோ பால், ரோவ்மான் பொவல், கேமர் ரோச், மார்லன் சாமுவேல்ஸ், ஓஷேன் தாமஸ், ஓபேட் மெக்காய்.

Label