OUR CLIENTS
சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேல்முறையீடு - தங்கதமிழ்ச்செல்வன் தகவல்
சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேல்முறையீடு - தங்கதமிழ்ச்செல்வன் தகவல் Posted on 25-Oct-2018 சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேல்முறையீடு - தங்கதமிழ்ச்செல்வன் தகவல்

சென்னை
சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே, 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தங்கதமிழ்ச்செல்வன் உள்பட டிடிவி. தினகரனின் ஆதரவு 19 எம்.எல்.ஏ.-க்கள் கொண்ட குழு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தித்து, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து 19 எம்.எல்.ஏ.-க்களுக்கும் பேரவைத் தலைவர் தனபால் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டார். அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் பேரவைத் தலைவர் தனபால் இந்த நடவடிக்கையை எடுத்தார். பேரவைத் தலைவரின் தீர்ப்புக்கு எதிராக வழக்கு: 19 எம்.எல்.ஏ.-க்களில் ஒருவரான ஜக்கையன், தனது கோரிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, 18 எம்.எல்.ஏ.-க்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார். பேரவைத் தலைவர் தனபாலின் தீர்ப்புக்கு எதிராக, 18 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 18 எம்.எல்.ஏ.-க்களின் வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எம்.எல்.ஏ.-க்களின் தகுதிநீக்கம் செல்லும் எனவும், மற்றொரு நீதிபதி எம்.சுந்தர் எம்.எல்.ஏ.-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ம் தேதி அளித்தனர். மாறுபட்ட தீர்ப்பு காரணமாக இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா விசாரிப்பார் என நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக எம்.சத்தியநாராயணனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் எனவும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலாவுடன் ஆலோசனை செய்த பின்னரே மேல்முறையீடு குறித்து முடிவு எடுக்கப்படும்.

அரசிற்கு ஆதரவாகவே நீதிமன்றம் செயல்படுவதாக தெரிகிறது. அரசாங்கம் சொல்படிதான் நீதிமன்றம் நடக்கிறதா என சந்தேகம் எழுகிறது. மக்கள் மன்றத்தில் முறையிட்டு நியாயம் கேட்போம் என்று தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

Label