OUR CLIENTS
மேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு!
மேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு! Posted on 25-Oct-2018 மேல்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் ஒழிப்பு!

வேலூர், அக்.25-

வேலூர் மாவட்டம், பொன்னை மேல்பாடி காவல் சரக எல்லையில் கள்ளச்சாராய விற்பனை அடியோடு ஒழிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், மேல்பாடி காவல் நிலையத்துக்கு லதா காவல் உதவி ஆய்வாளராக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் பொறுப்பேற்றது முதல் கள்ளச்சாராய வேட்டையை நடத்தினார். இதனால் சுமார் 16க்கும் மேற்பட்ட சாராய வியாபாரிகளை   கைது செய்து சிறையில் அடைத்தார். அத்துடன் மேல்பாடி காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியான விண்ணம்பள்ளி, மகிமண்டலம்,  பெரிய ராமநாதபுரம் பகுதிகளில் அடியோடு சாராய விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.  

இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். லதா போன்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் லதா சாராய வியாபாரத்தை முறியடித்ததால் இத்தனை கிராமமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர். 

Label