OUR CLIENTS
பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய அழைப்பு- முதலமைச்சர், துணை முதலமைச்சர் வேண்டுகோல்
பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய அழைப்பு- முதலமைச்சர், துணை முதலமைச்சர் வேண்டுகோல் Posted on 28-Oct-2018 பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய அழைப்பு-  முதலமைச்சர், துணை முதலமைச்சர் வேண்டுகோல்

சென்னை, அக்.28-

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணைமுதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் இருவரும் வெளியிட்டுள்ள செய்தியில், அ.தி.மு.க. 1000 காலத்து பயிர். தமிழர்களுக்கு நிம்மதி எனும் நிழல் தரும் ஆலமரம். நாம் ஒன்றுபட்டு உழைத்தால் அ.தி.மு.க. எனும் பேரியக்கம் புதிய புறநானூறு படைக்கும் ஆற்றல் பெற்ற இயக்கம் ஆக உருவெடுக்கும்.

உயர் நீதிமன்ற தீர்ப்பு தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தினை தந்துள்ளது. அ.தி.மு.க.வினருக்கும், தமிழக மக்களுக்கும் புத்துணர்வினை தந்துள்ளது.
ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் இயக்கம் ஆக விஸ்வரூபம் எடுத்து அரசியல் எதிரிகளை அழிக்கும். அதனால், கட்சியில் இருந்து சில தவறான வழிநடத்துதலால் பிரிந்து சென்றவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும்.

சிறு சிறு மனக்கசப்புகளால் மாற்று பாதையில் பயணிக்க சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும். எண்ண வேறுபாடுகளை புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டு உழைக்கும் இயக்கத்திற்கு திரும்ப வேண்டும். நீர் அடித்து நீர் விலகாது என்பது முதுபெரும் தமிழ் பழமொழி அல்லவா? உயர் நீதிமன்ற தீர்ப்பின் யதார்த்தத்தினை புரிந்து மாற்று பாதையில் சென்றோர் கட்சிக்கு திரும்புங்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் அழைப்பில் அரத்தம் இல்லை என்றார் பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவின் பொதுச்செயலாளர், அவர் நியமித்த துணைப் பொதுச்செயலாளர் பற்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் அழைப்பில் எதுவும் இல்லை, கட்சியின் பெயர் சின்னத்துக்கு தொடரப்பட்ட வழக்குகளில் விசாரணை முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அவற்றை எல்லாம் மறைத்துவிட்டு இணைய வாரீர் என்றழைத்தால் என்ன அர்த்தம்? உங்கள் அழைப்பை ஏற்று அதிமுகவில் இணைய நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறு தங்க தமிழ்ச்செல்வன் பதிலளித்தார்.

Label