OUR CLIENTS
ஜப்பான் பிரதமருடன் – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு- மண்டல பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை
ஜப்பான் பிரதமருடன் – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு- மண்டல பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை Posted on 28-Oct-2018 ஜப்பான் பிரதமருடன் – இந்திய பிரதமர் மோடி சந்திப்பு- மண்டல பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை

டோக்கியோ, அக்.29

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷின்ஸோ அபேயை இன்று சந்தித்தார். இருநாட்டு இடையிலான மண்டல பாதுகாப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தியா - ஜப்பான் இடையிலான 13வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று ஜப்பான் சென்றார்.

அவருக்கு டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் ஜப்பான் அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஜப்பானுக்கான இந்திய தூதர் ஆகியோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவை பிரதமர் மோடி  இன்று சந்தித்து பேசினார். இந்த தகவலை பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த டுவிட்டரில் 

‘‘ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேயை யமனஷி நகரில் சந்தித்தேன். இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் குறிப்பாக இந்தோ-பசிபிக் மண்டல பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

Label