சபரிமலையில் பக்தர்கள் போர்வையில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மோதல்களை ஏற்படுத்தி வருகின்றனர் - டி.ராஜா Posted on 30-Oct-2018
சென்னை
சபரிமலையில் பக்தர்கள் போர்வையில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மோதல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா செய்தியார்களிடம் கூறியதாவது:
இலங்கையில் மீண்டும் ராஜபக்சே பதவி ஏற்றிருப்பதால் தமிழர்களுக்கு என்னவாகும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ராஜபக்சே செயல்பட வேண்டும். சபரிமலையில் பக்தர்கள் போர்வையில் ஆர்எஸ்எஸ், பாஜகவினர் மோதல்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று டி.ராஜா கூறியுள்ளார்.