OUR CLIENTS
பெட்ரோல், டீசல், சிமெண்ட், ரயில் சரக்குக் கட்டணம் 8.75 சதவீதம் உயர்வு
பெட்ரோல், டீசல், சிமெண்ட், ரயில் சரக்குக் கட்டணம் 8.75 சதவீதம் உயர்வு Posted on 01-Nov-2018 பெட்ரோல், டீசல், சிமெண்ட், ரயில் சரக்குக் கட்டணம் 8.75 சதவீதம் உயர்வு

புதுடில்லி

உணவு தானியங்கள், மாவு வகைகள், பருப்பு வகைகள், உரங்கள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றுக்கான ரயில்வே சரக்கு கட்டணம் நீங்கலாக பெட்ரோலியப் பொருள்கள் பெட்ரோல், டீசல், சிமெண்ட் ஆகிய கட்டுமான வளர்ச்சிக்கு அடிப்படையான பொருள்களுக்கான சரக்குக் கட்டண் 8.75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு புதனன்று (31.10.2018) வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தவிர கண்டெய்னர் மூலமாகப் பொருள்களை அனுப்புவதற்கான கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற சிறு சிறு பொருள்களுக்கான சரக்குக் கட்டணமும் 8.75 சதவீதம் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மற்றும் சமூகத்தில் உள்ள சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டுதான் தானிய வகைகள், கோதுமை மாவு, மைதா மாவு, பருப்பு வகைகள், சர்க்கரை ஆகிய உணவுப் பொருள்களுக்கான சரக்குக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

பெட்ரோல், டீசல், சிமெண்ட் மற்றும் சில சில்லரைப் பொருள்கள் மீதான கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும் ரயில்வே  கூறியுள்ளது. இதன் மூலம் ரூ. 3,344 கோடி இந்திய ரயில்வேக்கு கூடுதல் வருமானமாக கிடைக்கும்.

இந்தக் கூடுதல் வரவுதொகையைக் கொண்டு ரயில் பயணத்தின் பாதுகாப்பு, சேவையின் தரம் ஆகியவை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Label