OUR CLIENTS
சேலம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு
சேலம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு Posted on 01-Nov-2018 சேலம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

சேலம் சிறுமியை கொடூரமாக கழுத்தறுத்து கொன்ற இளைஞரை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்காமல் காப்பாற்றும் முயற்சிதான் கொடூர குற்றத்திற்கு இந்த அரசு அளிக்கும் தண்டனையா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டியைச் சேர்ந்தவர் சிறுமி ராஜலட்சுமி (13) கடந்த மாதம் 22-ம் தேதி பக்கத்து வீட்டில் வசிக்கும் தினேஷ்குமார் என்பவரால் தொடர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, அவரது ஆசைக்கு இணங்க மறுத்ததால் தாய் எதிரிலேயே தினேஷ்குமாரால் கொடூரமான முறையில் தலையை வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் தான் கொல்லவில்லை முனி என் உடம்பில் வந்து கொன்றது என கதையளக்க போலீசார் அதை வைத்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கொலை சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள், சமூக இயக்கங்கள் கடுமையாக கண்டித்துவரும் நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியரோ, காவல்துறை எஸ்.பி.,யோ சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோரால் வைக்கப்பட்டது. இதையடுத்து 9 நாட்கள் கழித்து மாவட்ட ஆட்சியர் ரோகினி இன்று நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்தப் படுகொலை குற்றவாளியான தினேஷ் குமாருக்கு வழக்கு முடியும் வரை பிணை கொடுக்கக் கூடாது. அவரால் படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு ஆபத்து உள்ளது. மீண்டும் 3 நபர்களை வெட்டுவேன் என்று தெரிவித்துள்ளார். எனவே, குற்றவாளியைக் கடுமையாக தண்டிக்கவேண்டும். ராஜலட்சுமி குடும்பத்தினருக்கு இழப்பீடும் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் படுகொலைக்கு காரணமான கொலைக்குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவு: சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும்.

இவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Label