OUR CLIENTS
பஞ்சாபில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி: ராணுவ தளபதி
பஞ்சாபில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி: ராணுவ தளபதி Posted on 04-Nov-2018 பஞ்சாபில் மீண்டும் கிளர்ச்சியை ஏற்படுத்த அந்நிய சக்திகள் முயற்சி: ராணுவ தளபதி

புதுடில்லி

பஞ்சாப் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் கிளர்ச்சிகளை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வருவதாக ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கம் டில்லியில் நேற்று நடைபெற்றது. ராணுவம், காவல்துறை, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டனர். இதில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு பேசினார்.

இதில் பேசிய அவர்,”பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் நமக்கு பல வகைகளில் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால், அவற்றை நாம் திறம்பட முறியடித்து வருகிறோம். வெளிநாடுகளிலிருந்து வரும் ஆபத்துகளை நம்மால் எளிதில் சமாளித்துவிடமுடியும். அதேசமயம், உள்நாட்டிலிருந்து எழும் பிரச்சினைகளை கையாள்வது சவால் நிறைந்ததாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,”பஞ்சாபில் 1980ஆம் ஆண்டுகளில் காலிஸ்தான் தீவிரவாதம் காரணமாக அசாதாரண சூழல் நிலவி வந்தது. பின்னர், அரசும், ராணுவமும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக காலிஸ்தான் தீவிரவாதம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டது. ஆனால், தற்போது இந்த காலிஸ்தான் அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ளது. அவர்களின் மூலமாக பஞ்சாபில் கிளர்ச்சியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அசாமிலும் கிளர்ச்சியை ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன” என்று குற்றச்சாட்டினார்

எனவே, இவற்றை தடுக்க அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிபின் ராவத் கேட்டுக்கொண்டார்.

Label