OUR CLIENTS
பிரான்ஸ் புறப்பட்டார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
பிரான்ஸ் புறப்பட்டார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு Posted on 09-Nov-2018 பிரான்ஸ் புறப்பட்டார் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

புதுடெல்லி

அரசுமுறைப் பயணமாக குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

பிரான்ஸ் தலைநகரில் 'பாரிஸ் அமைதி மாநாடு' இன்று தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று பிரான்ஸ் புறப்பட்டுச்சென்றார். 3 நாள் அரசுமுறைப் பயணமாக டில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்ற வெங்கையா நாயுடுவுடன் அவரது மனைவி, உஷாவும் உடன் சென்றுள்ளார்.

பாரிஸ் அமைதி மாநாடு, முதலாம் உலகப் போர் முடிந்து நூறு வருடம் நிறைவடைந்ததை நினைவுகூறவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் தலைமைதாங்கி நடத்த இருக்கிறார். இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் வெங்கையா நாயுடு இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதைத் தொடர்ந்து, பிரான்ஸ்வாழ் இந்திய மக்களை சந்தித்து வெங்கையா நாயுடு உரையாற்றுகிறார். பின்னர், விலர்ஸ் குய்ஸ்லேனில் அமையவுள்ள இந்திய போர் நினைவிச்சின்னத்தை திறந்துவைக்கிறார்.

Label