OUR CLIENTS
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் ஏன் பயிற்சி அளிக்க கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் ஏன் பயிற்சி அளிக்க கூடாது? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி Posted on 13-Nov-2018 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் ஏன் பயிற்சி அளிக்க கூடாது?  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை, நவ.13-

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 80 லட்சம் பேர், ஆங்கிலப் பேச்சு பயிற்சி திறன் இல்லாததால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் பாதிக்கப்படுவதாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வழக்குத் தொடர்ந்தார். அரசு தமிழ் வழிப் பள்ளிகளில், ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

Label